கைவிரிக்கும் மேற்கத்திய நாடுகள்... ஆட்டம் காணும் உக்ரைனின் பொருளாதாரம்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உறுதி அளித்திருந்த பொருளாதார உதவி தடைபட்டுள்ள நிலையில், உக்ரைனின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு ஆட்டம் காணும் என்றே கூறப்படுகிறது.
2024ல் இந்த நிலை கடுமையாகும்
மேற்கத்திய நாடுகளின் ஆதரவால் அடுத்த சில மாதங்களை உக்ரைன் நிர்வாகத்தால் சமாளிக்க முடியும் என்றே கூறப்படுகிறது. ஆனால் 2024ல் இந்த நிலை கடுமையாகும் என்றும், உக்ரைன் தனது சொந்த வளங்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.
@reuters
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 18.5 பில்லியன் யூரோக்கள் மற்றும் அமெரிக்காவிடமிருந்து 8 பில்லியன் டொலர்கள் உட்பட வெளிநாட்டு நிதி உதவி மூலம் அடுத்த ஆண்டு 43 பில்லியன் டொலர் தொகையால் தங்களது வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும் என்று உக்ரைன் நம்புகிறது.
ஆனால் இருதரப்பில் இருந்தும் அந்த தொகையானது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த தொகை மிக விரைவில் விடுவிக்கப்படும் என்றே கூறப்படுகிறது. 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் தனது மொத்த வருவாயையும் உக்ரைன் பாதுகாப்பிற்கும் ராணுவத்திற்கும் செலவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு 20 பில்லியன் டொலர்
ஆனால் ஓய்வூதியங்கள் முதல் சமூகக் கொடுப்பனவுகள் வரை அனைத்திற்கும் செலவழிப்பது பல்லாயிரக்கணக்கான பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு உதவிகளால் ஈடுசெய்யப்பட்டுள்ளது.
@reuters
2024ல் உக்ரைனுக்கு பல பில்லியன் டொலர்கள் நிதி தேவைப்படுகிறது. IMF தரப்பில் இருந்து இந்த மாதம் 900 மில்லியன் டொலர் நிதி அளிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க உக்ரைன் வரிகளை உயர்த்தும்படி கட்டாயப்படுத்தலாம், இது பொருளாதாரத்திற்கு எதிர்விளைவாக இருக்கும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 2022ல் இறையாண்மை பத்திரதாரர்கள் இரண்டு வருட கட்டணத்தை முடக்க ஒப்புக்கொண்ட பிறகு, உக்ரைன் அடுத்த ஆண்டு 20 பில்லியன் டொலர் சர்வதேச கடனை செலுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
மேலும், 2023ல் உக்ரைனின் வர்த்தக பற்றாக்குறை என்பது முதல் 10 மாதங்களில் 22.3 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |