பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 7 ரிக்டர் அளவில் ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீவில் நில நடுக்கம்
பப்புவா நியூ கினியாவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் 62 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலையில் 4 மணியளவில் ரிக்டர் அளவில் 7.0 என பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
@istock
தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்படும் மண்டலத்தில் பப்புவா நியூ கினியாவும் ஒன்று என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தீவில் மக்கள் தொகை குறைவு என்பதால் பாதிப்பு ஏதும் அதிக அளவு உணரப்படவில்லை.
சுனாமி எச்சரிக்கை
கடலுக்கு அடியில் உள்ள பூமியின் தட்டுக்கள் நகர்ந்ததே இந்த நில நடுக்கத்திற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
உலகத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்று தட்டுக்கள் நகர்கின்றன. இந்த இடங்களில் எல்லாம் தட்டுக்கள் லேசானதாக இருப்பதே இதற்கு காரணமாகும்.
@google map
மறுபுறம் இந்தோனேஷியாவின் எல்லை பகுதியிலிருந்து 100 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் எற்பட்டிருப்பதால் சுனாமி ஏற்படுமோ என்கிற சந்தேகம் வலுத்தது.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதேபோல கடந்த பிப்ரவரி மாதம் இதே போல 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.