சுறாவிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிய திமிங்கலம்: நம்ப முடியாத ஒரு ஆச்சரிய செய்தி
ஆவணப்படப் படம் ஒன்றிற்காக கடலில் நீந்திக்கொண்டிருந்த கடல் உயிரியலாளர் ஒருவரை திமிங்கலம் ஒன்று காப்பாற்றியதைக் குறித்த ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நம்ப முடியாத சம்பவம்
Cook Islands என்னும் தீவுகளின் அருகே ஆவணப்படப் படம் ஒன்றிற்காக கடலில் நீந்திக்கொண்டிருந்திருக்கிறார் கடல் உயிரியலாளரான Nan Hauser (69).
அப்போது, திமிங்கலம் ஒன்று அவரை நெருங்கியுள்ளது. திடீரென Nanஐ நெருக்கித் தள்ளத் துவங்கியுள்ளது 50,000 பவுண்டு எடையுள்ள அந்த திமிங்கலம்.
Credit: Caters News Agency
அவரைத் தள்ளியும், பின்னர் தனது துடுப்புகளின் மீது அவரைத் தாங்கியும் அந்த திமிங்கலம் ஏதேதோ செய்ய, அவ்வளவுதான், நம் வாழ்க்கை இந்த கடலிலேயே முடியப்போகிறது என்ற முடிவுக்கே வந்துள்ளார் Nan.
ஆனால், அந்த திமிங்கலம் அவரை வேறொன்றும் செய்யவில்லை. அவரை அது அவருடைய படகை நோக்கி தள்ளிக்கொண்டு வந்துள்ளது.
அப்போது, தற்செயலாக Nan ஒரு விடயத்தைக் கவனித்திருக்கிறார். ஆம், சற்று தொலைவில் கொலைகார சுறா ஒன்று Nanஐ நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்திருக்கிறது.
Credit: Caters News Agency
ஆக, அப்போதுதான் Nanக்கு புரிந்திருக்கிறது, அந்த திமிங்கலம் தன்னைத் தாக்கவில்லை, அந்த சுறாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றத்தான் அது தன்னை தள்ளிக்கொண்டும் சுமந்துகொண்டும் வந்துள்ளது என்பது.
Nanஉடைய படகு வரை அந்த திமிங்கலம் அவரைக் கொண்டு சேர்க்க, அவர் கண்ணீருடன், ‘ஐ லவ் யூ, ஐ லவ் யூ’ என அந்த திமிங்கலத்தைப் பார்த்து கத்தியிருக்கிறார். இந்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த படப்பிடிப்புக் குழுவினரும் அழுதுவிட்டார்களாம்.
மீண்டும் ஒரு ஆச்சரியம்
இது நடந்து சரியாக 1 வருடம் 15 நாட்கள் ஆன நிலையில், கடல் ஆய்வு ஒன்றிற்காக சென்றிருந்தபோது, ஒரு திமிங்கலம் அந்த பகுதியில் நடமாடுவதாக மீனவர்கள் தகவல் Nanக்கு கொடுத்துள்ளார்கள்.
உடனே அங்கு படகில் சென்றிருக்கிறார் Nan. ஆச்சரியம் என்னவென்றால், அது அதே திமிங்கலம். அதன் வாலில் உள்ள இரண்டு பிளவுகளை வைத்து, அது தன்னைக் காப்பாற்றிய திமிங்கலம்தான் என்பதை அறிந்துகொண்ட Nan கடலில் இறங்கியிருக்கிறார்.
Credit: National Geographic for Disney
அவர் கடலில் இறங்கியதும், அந்த திமிங்கலம் அவர் அருகே வந்துள்ளது. ஒரு நாய்க்குட்டி அதன் உரிமையாளரைக் கண்டதும் ஓடோடி வந்து கொஞ்சுவது போல அவரைக் கொஞ்சியிருக்கிறது அந்த திமிங்கலம். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் அளவளாவ, பின்னர் மனதே இல்லாமல் படகுக்குத் திரும்பியிருக்கிறார் Nan. அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
என்னிடம் யாராவது ஒரு திமிங்கலம் என்னைக் காப்பற்றியது, மீண்டும் தேடி வந்தது என்று சொன்னால் நானே நம்பமாட்டேன், ஆனால், அது எனக்கே நிகழ்ந்தது என்பதை என்னால் நம்பமுடியவில்லை என்கிறார்.
Credit: National Geographic for Disney
இப்போதும் அந்த திமிங்கலத்தை சந்தித்த நிகழ்வுகள் மலரும் நினைவுகளாக மனதில் இருப்பதாக தெரிவிக்கிறார் Nan!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |