விமான பயணத்தில் செல்போனை ஏரோபிளேன் மோடுக்கு மாற்றாவிட்டால் என்ன நிகழும்?
விமான பயணத்தின் போது, செல்போனை ஏரோபிளேன் மோடுக்கு மாற்றாவிட்டால் என்ன நிகழும் என்பதை பார்க்கலாம்.
விமான பயணத்தில் ஏரோபிளேன் மோடு
சமீபகாலமாக விமான விபத்துகள் மற்றும் விமான அவசர தரையிறக்கம் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், மக்களிடையே விமான பயணம் குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இதனை தவிர்க்க, விமான நிறுவனங்களும் விமான பாதுகாப்பு நடைமுறையை தீவிரமாக கையாண்டு வருகிறது.
பொதுவாக விமானத்தில் பறக்கும் பயணிகளிடம், செல்போனை சுவிட்ச் ஆப் அல்லது ஏரோபிளேன் மோடுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.
எதற்காக அப்படி கூறுகிறார்கள் என்று பெரும்பாலான பயணிகளுக்கு தெரியாது. அப்படி மாற்றாவிட்டால், செல்போன் சமிக்ஞை விமானத்தின் தொடர்பை பாதித்து, பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் விமானி ஒருவர், விமான பயணத்தின் போது, செல்போனை சுவிட்ச் ஆப் அல்லது ஏரோபிளேன் மோடுக்கு மாற்றாவிட்டால் என்ன நிகழும் என விளக்கியுள்ளார்.
என்ன நிகழும்?
அதாவது, "விமானத்தில் ஒரு 150 பேர் பயணித்தால், மூன்று அல்லது நான்கு பேரின் தொலைபேசிகளுக்கு அழைப்பு வரும் போது, அது ரேடியோ கோபுரத்துடன் இணைக்க முயற்சிக்கத் தொடங்கினால், அது ரேடியோ அலைகளை அனுப்புகிறது.
இந்த ரேடியோ அலைகள் விமானிகள் பயன்படுத்தும் ஹெட்செட்களில் தலையிடக்கூடும்.
இது கொசு காதில் கத்துவதை போன்று எரிச்சலான ஒலியை ஹெட்செட்களில் எழுப்பியதால், விமானத்தை தரை இறக்க முயற்சித்ததாக விமானி ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இதுதான் காரணம் என்பதால், விமானம் பயணத்தின் போது, செல்போனை ஏரோபிளேன் மோடுக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஏரோபிளேன் மோடுக்கு மாற்றாமல் விட்டால், உங்கள் தொலைபேசி தொடர்ந்து செல்லுலார் சிக்னல்களைத் தேடுவதால், பேட்டரி வேகமாக தீர்ந்து போகும்.
இதன் காரணமாக நேரடியாக விமான விபத்துக்கள் சம்பவங்கள் எதுவும் இல்லை என்றாலும், இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |