உடனடியாக முகம் பட்டு போல் பளபளக்க வீட்டில் உள்ள இந்த ஒரு மாவு போதும்
பொதுவாக அனைவரும் தங்களின் முகத்தை வெள்ளையாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
சூரிய கதிர்கள், உணவு மாற்றம் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து நிறம் மங்குவதை ஏற்படுத்துகிறது.
அந்தவகையில், வீட்டிலேயே இயற்கையாகவே முகப்பொலிவை அதிகரிக்க உதவும் கோதுமை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு- 3 ஸ்பூன்
- தேன்- ½ ஸ்பூன்
- பால்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- சிறிதளவு
தயாரிக்கும் முறை
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, தேன், பால் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
இதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல நன்கு கலந்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை
முதலில் முகத்தை பால் வைத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
பின் பாலை முகத்தில் தடவி ஒரு பருத்தி துணி வைத்து முகத்தில் ஒற்றி எடுக்கவும்.
பின்பு கோதுமை மாவு பேஸ்ட்டை முகத்தில் கண் பகுதியை தவிர்த்து விட்டு, முகம் மற்றும் கழுத்து தடவவும்.
அடுத்து முகத்தில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவேண்டும் இது இறந்த சரும செல்களை வெளியேற்றவும் ரத்த ஓட்டத்தை தூண்டவும் உதவும்.
இறுதியை பத்து நிமிடங்களில் நன்கு காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம்.
பின்பு தேங்காய் எண்ணெய் தடவினால் பளபளப்பாக இருக்கும். அதற்கடுத்து மென்மையான சோப்பு போட்டு முகத்தை கழுவி விடலாம்.
வாரம் இரண்டு முறை இந்த பேக்கை பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் பிரகாசமாகவும் ஜொலிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |