உலகின் வெப்பமான இடம் எங்கு அமைந்துள்ளது தெரியுமா? சவுதி அரேபியா, துபாய் அல்ல
உலகின் வெப்பமான இடம் எங்கு அமைந்துள்ளது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெப்பமான இடம்:
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில் சில இடங்களில் வெப்பநிலை 57 டிகிரி செல்சியஸ் வரை உயருகிறது. இப்போது நாம் பூமியில் உள்ள வெப்பமான 10 இடங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஃபர்னஸ் கிரீக் (Furnace Creek), டெத் வேலி, கலிபோர்னியா (அமெரிக்கா):
கலிபோர்னியாவின் வடக்கு மொஜாவே பாலைவனத்தில் கிழக்கில் இந்த பாலைவன பள்ளத்தாக்கு உள்ளது. இது, கோடை காலத்தில் பூமியின் வெப்பமான இடமாக கூறப்படுகிறது. ஜூலை 10, 1913 அன்று இந்த இடத்தின் வெப்பநிலை 56.7 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது.
கெபிலி (துனிசியா):
தெற்கு துனிசிய நகரமான கெபிலி, கோடையில் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவானது. ஜூலை 7, 1931 அன்று இந்த இடத்தின் வெப்பநிலை 55 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது.
அஹ்வாஸ் (ஈரான்):
ஈரானிய பாலைவனமான அஹ்வாஸில் 2017ஆம் ஆண்டில் 54 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
டிராட் ஸ்வி:
இஸ்ரேல்-ஜோர்டான் எல்லையில் பெய்ட் ஷீயான் பள்ளத்தாக்கில் டிராட் ஸ்வி அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஜூன் 21, 1942 அன்று 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பாஸ்ரா (ஈராக்):
தெற்கு ஈராக்கில் பாஸ்ரா துறைமுகம் உள்ளது. இந்த இடத்தில் ஜூலை 21, 2016 அன்று 53.9 டிகிரி செல்சியஸ் என்ற மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மிட்ரிபா (குவைத்):
வடமேற்கு குவைத்தில் உள்ள மிட்ரிபா வானிலை நிலையத்தில் ஜூலை 21, 2016 அன்று 53.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
டர்பத் (பாகிஸ்தான்):
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள டர்பத் நகரத்தில் மே 28, 2017 அன்று 53.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
அல் ஜசீரா பார்டர் கேட் (யுஏஇ):
அல் ஜசீரா பார்டர் கேட் என்ற வறண்ட பாலைவனத்தில் ஜூலை 2002 இல் 52.1 டிகிரி வெப்பநிலை பதிவானது.
மெக்ஸிகலி (மெக்ஸிகோ):
அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் அமைந்துள்ள மெக்ஸிகலி, ஜூலை 28, 1995 அன்று 52 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
ஜெட்டா (சவுதி அரேபியா):
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரமானது ஜூன் 22, 2010 அன்று அதிகபட்ச வெப்பநிலையான 52 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |