தமிழ்நாட்டில் NOTA வாக்குகளை அதிகம் பெற்ற தொகுதி எது?
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் எந்த தொகுதியில் NOTA வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
கடந்த 2013 -ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையமானது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் NOTA -வை None Of The Above) சேர்த்தது.
எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை பதிவு செய்வதற்காகவும், வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்களின் ஓட்டுகள் கள்ள ஓட்டுகளாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவும் NOTA கொண்டுவரப்பட்டது.
கடந்த 2019 -ம் ஆண்டு மக்களவை தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் NOTA இடம் பெற்றுவருகிறது.
இதில், நோட்டாவுக்குப் அதிக வாக்குகள் பதிவானால் புதிய வேட்பாளர்களைக் கொண்டு மறுதேர்தல் நடத்தவேண்டும்.
இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்திய அளவில் நோட்டாவுக்கு 0.99% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் எங்கு?
அந்தவகையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 26,450 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்திருக்கிறது. அடுத்ததாக, திண்டுக்கல் தொகுதியில் 22,120 வாக்குகள் கிடைத்திருக்கிறது.
இதில், குறைந்தபட்ச NOTA வாக்குகளாக கன்னியாகுமரி தொகுதியில் 3,756 வாக்குகளும், ராமநாதபுரம் தொகுதியில் 6,295 வாக்குகளும் கிடைத்திருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |