உயரமான விநாயகர் சிலை எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? ஆனால், இந்தியாவில் அல்ல
இந்த நாட்டில் தான் மிக உயரமான விநாயகர் சிலை எந்த நாட்டில் உள்ளது.
உயரமான விநாயகர் சிலை
எண்ணற்ற கோயில்கள் மற்றும் விநாயகர் சிலைகளுக்கு இந்தியா தாயகமாக இருந்தாலும் மிக உயரமான விநாயகர் சிலை இந்தியாவில் இல்லை.
39 மீட்டர் உயரமுள்ள விநாயகர் சிலை தாய்லாந்தின் சாச்சோங்சாவ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கிய யாத்திரைத் தலமாகவும் சுற்றுலா தலமாகவும் மாறியுள்ளது.
இந்த சிலை தாய்லாந்தின் செழிப்புடன் தொடர்புடைய ஆழமான அடையாளங்களுடன் வடிவமைக்கப்பட்டதாக விநாயகர் சிலையை உருவாக்கிய சிற்பி பிடக் சலூம்லாவ் கூறினார்.
கரும்பு, பலாப்பழம், வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்களை ஆகியவை தெய்வத்தின் நான்கு கைகளில் உள்ளன. இவை வளர்ச்சி மற்றும் ஆசீர்வாதங்களைக் குறிக்கின்றன.
இதேபோல், தேசத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கும் தாமரை கிரீடம் ஞானத்தை பிரதிபலிக்கிறது. மேலே, புனிதமான "ஓம்" சின்னம் உள்ளது.
கலாச்சாரத்தில் ஈர்க்கப்பட்டு வெற்றி, அறிவு மற்றும் பாதுகாப்பின் கடவுளாகக் கருதப்படுகிறார் விநாயகர். வீடுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அலுவலகங்களில் கூட விநாயகர் சிலையை வைத்து மக்கள் ஆசி பெறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |