உலகின் பலவீனமான கரன்சி எந்த நாட்டைச் சேர்ந்தது தெரியுமா?
உலகின் பலவீனமான கரன்சி எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது பற்றிய தகவலை பார்க்கலாம்.
பலவீனமான கரன்சி
ஒரு நாட்டின் பொருளாதார மதிப்பு என்பது அந்நாட்டின் கரன்சியின் மதிப்பை வைத்து தீர்மானம் செய்யப்படுகிறது. வலிமையான பொருளாதாரம் கொண்ட நாடுகளில் கரன்சி மதிப்பு அமெரிக்க டொலர் மதிப்புடன் வலுவானதாக இருக்கும்.
ஈரான் நாட்டின் ரியால் தான் உலகில் மிகவும் பலவீனமான கரன்சிகளில் ஒன்றாக உள்ளது. அந்த நாட்டின் சர்வதேச தடைகள், அதிக பணவீக்கம், அரசியல் திறமை இன்மை உள்ளிட்ட பல காரணங்களால் பலவீனமான கரன்சியாக ரியால் மாறியுள்ளது.
42,000 ஈரான் ரியால் என்பது ஒரு அமெரிக்க டொலராக உள்ளது. அந்த அளவுக்கு ஈரான் நாட்டின் கரன்சி மிகவும் பலவீனமாக இருக்கிறது.
இதேபோல 2019 ஆம் ஆண்டு முதல் லெபனான் நாடும் பொருளாதாரத்தில் பலவீனமாக உள்ளது. அதன்படி அங்கு ஒரு டொலரின் மதிப்பு 89,000 லெபனான் பவுண்டுக்கு சமம்.
மேலும், 25,000 வியட்நாம் மதிப்பு ஒரு டொலராக இருக்கிறது. ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் நாட்டிலும் 23,000 லியோன் பணத்தின் மதிப்பு ஒரு டொலருக்கு சமம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |