மணிக்கு 222 கிமீ வேகம்.., உலகின் மிகப்பெரிய அதிவேக ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடு எது?
இந்தியா தனது முதல் புல்லட் ரயிலை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் பல நாடுகள் இந்தியாவை விட முந்தி செல்கின்றன.
High speed rail network
ரயிலில் பயணம் மேற்கொள்வது அனைத்து நாடுகளிலும் அத்தியாவசியமாக மாறிவிட்ட நிலையில் பல நாடுகள் மிகப்பெரிய அளவில் ரயில் நெட்வொர்க்கை கொண்டுள்ளது. அந்த வரிசையில் இந்தியா பின்தங்கியே உள்ளது என்று சொல்லலாம்.
உலகின் மிகப்பெரிய அதிவேக ரயில் நெட்வொர்க்கை (high-speed rail networks) கொண்டுள்ள நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதாவது, இந்த நாடானது 45,000 கி.மீ அதிவேக ரயில் நெட்வொர்க்கை கொண்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் உள்ளது. இது, ஏற்கனவே 3,966 கி.மீ ரயில் நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது.
மேலும், அதிவேக ரயில் நெட்வொர்க்கை கொண்டுள்ள பிற நாடுகள் பட்டியலில் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
ஸ்பெயினில் உள்ள ரயில்கள் மணிக்கு சராசரியாக 222 கி.மீ வேகத்தில் செல்கின்றன. அதாவது மாட்ரிட்-பார்சிலோனா பாதையில் சராசரியாக மணிக்கு 248 கி.மீ வேகத்தை எட்டுகின்றன. இதனால் ரயில் பயணத்தை சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்களில் முடிக்க முடிகிறது.
மறுபுறம், இந்தியாவில் உள்ள வந்தே பாரத் ரயில்கள் சராசரியாக 180 கிமீ வேகத்தைக் கொண்டுள்ளன. இதன்படி, 6 முதல் 7 மணிநேரம் வரையுள்ள பயண நேரம் வெறும் 2 மணி நேரமாகக் குறைகிறது.
🚆 World's longest high-speed rail networks:
— World of Statistics (@stats_feed) August 9, 2025
🇨🇳 China: 45,000 kilometers
🇪🇸 Spain: 3,966 km
🇯🇵 Japan: 3,096 km
🇫🇷 France: 2,800 km
🇬🇧 UK: 2,214 km
🇩🇪 Germany: 1,658 km
🇫🇮 Finland: 1,120 km
🇮🇹 Italy: 1,117 km
🇰🇷 South Korea: 887 km
🇸🇪 Sweden: 860 km
🇬🇷 Greece: 672 km
🇷🇺 Russia:…
இதனிடையே இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியா தனது முதல் புல்லட் ரயில் நெட்வொர்க்கை நிறைவு செய்வதில் முன்னேறி வருகிறது என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |