புடினுக்கு டூப்பாக செயல்படுபவர் இவர்தானாம்: ரஷ்ய வர்ணனையாளர் தெரிவித்துள்ள தகவல்...
புடினைப்போலவே ரஷ்யாவில் பலர் இருப்பதாகவும், அவர்கள் புடீனுக்கு டூப்பாக செயல்படுவதாகவும், உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
சமீபத்தில், புடினுக்கு டூப்பாக செயல்படுபவர்கள் மூன்று பேர் என உக்ரைனும் தெரிவித்திருந்தது.
புடினுக்கு டூப்பாக செயல்படுபவர் இவர்தானாம்
இந்நிலையில், புடினுக்கு டூப்பாக செயல்படுபவர்களில் ஒருவர் பெயர் Yevgeny Vasilyevich என்றும், அவர் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் ரஷ்ய வர்ணனையாளரான Dr Valery Solovey என்பவர் தெரிவித்துள்ளார். அவர் முன்பு மாஸ்கோ சர்வதேச உறவுகள் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார்.
Image: Kremlin/Valery Solovey/east2west news
அத்துடன், Yevgeny தச்சுவேலை செய்பவர் என்றும் கூறியுள்ள Dr Valery Solovey, புடினுடைய டூப்பாக செயல்பட்ட மற்றொரு நபர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஏதோ ஒவ்வாமை என முதலில் மருத்துவர்கள் நினைத்ததாகவும், ஆனால், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பின்னர் தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.
Image: SPUTNIK/AFP via Getty Images
அவரைக் கொல்லும் அளவுக்கு விஷம் கொடுக்கப்படாததால் அவர் உயிர் பிழைத்துள்ளதாகவும், அவருக்கு எப்படி விஷம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து ரஷ்ய அதிகாரிகள் விசாரித்துவருவதாகவும் Dr Valery Solovey தெரிவித்துள்ளார்.
Image: social media/e2w
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |