முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம் - மணப்பெண் யார் தெரியுமா?
அயர்லாந்து பெண்ணுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறுள்ளது.
ஷிகர் தவான்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷிகர் தவான், 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,867 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

மேலும், ஐபிஎல் தொடரில், டெல்லி, மும்பை ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்தார்.
விவாகரத்து
ஷிகர் தவான் கடந்த 2012 ஆம் ஆண்டில், தன்னை விட 12 வயது மூத்தவரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்ற குத்துச்சண்டை வீராங்கனையை திருமணம் செய்தார்.
ஆயிஷா முகர்ஜிக்கு அவரது முந்தைய திருமணம் மூலம் ஏற்கனவே 2 குழந்தைகள் இருந்தது. அதன் பின்னர் ஷிகர் தவானுடன் ஒரு குழந்தை பெற்றுக்கொண்டார்.
2021 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்து வாழப்போவதாகஅறிவித்தனர். இதனையடுத்து, 2023 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதன் பின்னர், 2025 ஆம் ஆண்டில் சோஃபி ஷைன்(Sophie Shine) என்பவரை காதலித்து வருவதாக ஷிகர் தவான் உறுதிப்படுத்தினார்.
நிச்சயதார்த்தம்
இன்று சோஃபி ஷைனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில். அந்த புகைப்படத்தை ஷிகர் தவான் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இவர்களின் திருமணம் வரும் பிப்ரவரி 3வது வாரத்தில் டெல்லியில் வைத்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தில், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோஃபி ஷைன்
1990 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் பிறந்த சோஃபி ஷைனை, துபாயில் வைத்து முதல்முறையாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது உருவான நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
2024 ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகளுக்காக ஷிகர் தவானுடன் சோஃபி மைதானத்திற்கு வந்தபோது, இந்த ஜோடி முதன்முதலில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

லிமெரிக் தொழில்நுட்ப நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் மற்றும் மேலாண்மையில் பட்டம் பெற்றுள்ள சோஃபி ஷைன், பன்னாட்டு நிறுவனத்தில் தயாரிப்பு ஆலோசகராகப் பணியாற்றினார்.

மேலும், மார்ச் 2025 வரை அபுதாபியில் உள்ள நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
தற்போது டா ஒன் ஸ்போர்ட்ஸின் ஷிகர் தவான் அறக்கட்டளைக்குத் தலைமை தாங்குகிறார் சோஃபி ஷைன்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |