புடினை ஆட்டம் காண வைத்த வாக்னர் குழு! யார் இவர்கள்? பின்னணி என்ன?
ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழு அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியதால் ஜனாதிபதி புடின் மிரண்டு போனார், மாஸ்கோவை விட்டு கூட தனி விமானத்தின் மூலம் அவர் வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு போர் வெடிக்குமோ என்ற பதட்டமும் இல்லாமல் இல்லை, யார் இவர்கள்? ரஷ்யா உருவாக்கிய குழுவினரை பார்த்தே மிரள்வது ஏன்?
யார் இந்த வாக்னர் குழு?
முன்னாள் ரஷ்ய அதிகாரியான டிமிட்ரி உக்டின் மற்றும் புடினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரான யெவ்ஜெனி ப்ரிகோஜின் இணைந்து 2014ம் ஆண்டு வாக்னர் ஆயுதக்குழுவை உருவாக்கினர்.
2022ம் ஆண்டு முதல் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கிய வாக்னர் குழுவில் 50,000 க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.
புடினின் சொந்த ராணுவமாக கருதப்படும் வாக்னர் குழு, கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்கக்கூடியவர்கள்.
கொடூர கொலைக்காரர்கள், ஈவு இரக்கமற்றவர்கள் என அச்சுறுத்தும் வகையிலேயே இவர்கள் குறித்த விவரிப்பும் இருக்கிறது.
தொடக்கத்தில் 5000 பேருடன் ரகசியமாக செயல்பட்டு வந்ததாகவும், 2015ம் ஆண்டுக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் அரசுக்கு ஆதரவாக செயல்பட களமிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் தெளிவாக சொல்லப்போனால், யார் நிதி வழங்குகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்கள்.
Reuters
மிக சாதாரணமாக தங்களது உயிரை பற்றிக்கூட கவலை ஏதுமின்றி சொன்ன வேலையை கச்சிதமாக முடிக்கக்கூடியவர்கள்.
உக்ரைனுக்கு எதிரான போரில் கூட ரஷ்யாவுக்கு ஆதரவாக சட்டவிரோத வேலைகளை வாக்னர் குழு செய்து வந்துள்ளது.
ஆயுதங்களை சிறப்பாக இயக்குவதில் பயிற்சி பெற்ற வாக்னர் குழுவில், கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் என கொடூர எண்ணம் கொண்டவர்கள் இருக்கின்றனர்.
Stringer/Reuters
இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் உயரதிகாரியாக இருப்பவர்களுக்கும், வாக்னர் குழுவுக்கும் இடையேயான மோதலே ரஷ்யாவுக்கு எதிராகவே இவர்கள் திரும்ப காரணம் என கூறப்படுகிறது.
ரஷ்ய ராணுவ ரகசியங்கள் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டிருப்பதால் மோதல் தீவிரமாக வெடிக்கலாம் என பயம் தொற்றிக்கொண்ட நிலையில், பொலாரஸ் ஜனாதிபதியின் தலையீடால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |