கூகுள் CEO சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கிய தமிழ் நடிகரின் பின்னணி
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை, வாழ்ந்த வீட்டை வாங்கியவரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, சென்னையை பூர்விகமாக கொண்டவர். இவர் ஐஐடியில் படிக்க செல்லும் முன்பு வரை, சென்னை அசோக் நகரிலுள்ள தனது பூர்வீக வீட்டில் வாழ்ந்துள்ளார்.
@ap
பெற்றோருடன் தனது 20 வயது வயது வரை அந்த வீட்டில் வாழ்ந்து வந்த சுந்தர் பிச்சை, பின்னர் தனது திறமையில் முன்னேறி தற்போது கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார்.
இந்நிலையில் தற்போது அவரது பெற்றோர் வாழ்ந்து வந்த வீட்டை விற்று விட்டதாக தகவல் வெளியானது. அந்த வீட்டை வாங்கிய மணிகண்டன் பற்றி தெரிய வந்துள்ளது.
கண்ணீர் விட்டு அழுத பெற்றோர்
சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கிய மணிகண்டன் என்பவர், தமிழ் சினிமாவில் கிட்டதட்ட 6 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். குறிப்பாக ’மீண்டும், நிறம்’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னர் வீடு கட்டி விற்பனை செய்யும் தொழிலை செய்து வரும் இவர், தான் வளர்ந்து வந்த பாதை மிகவும் கடினமானது என கூறியுள்ளார்.
தன்னுடன் பிறந்தவர் 9 பேர் எனவும், தான் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்ததாகவும் கூறிய அவர், தன் குடும்பம் சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டது என கூறியுள்ளார்.
தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், மேலும் தமிழருக்கு பெருமை சேர்த்த சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கியதில் தான் பெருமிதம் கொள்வதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுந்தர் பிச்சையின் தந்தை வீட்டு பத்திரத்தில் கையெழுத்து போடும் போது மிகவும் வருத்தப்பட்டதாகவும், சில நிமிடங்கள் தாமதித்து கண்ணீர் மல்க கையெழுத்து போட்டதாகவும், பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது மணிகண்டன் கூறியுள்ளார்.