பணக்கார நாடுகளே இதை செய்யுங்கள்! WHO வைத்த வேண்டுகோள்
கொரோனா தடுப்பு மருந்துகளை ஏழை நாடுகளுக்கு பணக்கார நாடுகள் வழங்க வேண்டும் என WHO வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதனாம் கூறுகையில், பணக்கார நாடுகள் கொரோனா தொற்று அபாயம் இல்லாத பிரிவினருக்கும் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ள அதேநேரத்தில், ஏழை நாடுகள் தடுப்பு மருந்து இல்லாமல் தவிக்கிறது.
அதனால் கொரோனா தடுப்பு மருந்துகளை ஏழை நாடுகளுக்கு பணக்கார நாடுகள் வழங்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளில் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஏழை நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகளைப் பகிர்ந்தளிக்கப் பணக்கார நாடுகள் தயங்குவதாகவும், இதில் உலக நாடுகளும், உலகச் சமுதாயமும் தோல்வி அடைந்து விட்டது என கூறியுள்ளார்.