கட்டாய இராணுவச் சேர்க்கை உட்பட... உலகப் போருக்குத் தயாராகி வரும் மொத்த ஐரோப்பா
மூன்றாம் உலகப் போருக்கான ஆயத்த நடவடிக்கைகளை மொத்த ஐரோப்பிய நாடுகளும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது.
ரஷ்ய சாம்ராஜ்யம் மீண்டும்
அத்துடன், ரஷ்ய படையெடுப்பில் இருந்து தப்பிக்க கட்டாய இராணுவச் சேர்க்கை திட்டங்களும் முன்மொழியப்பட்டு வருகிறது.
கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோவை வெளியேற்றி ரஷ்ய சாம்ராஜ்யத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு போரில் விளாடிமிர் புடின் சில ஆண்டுகள் தொலைவில் உள்ளார் என்ற அச்சமே ஐரோப்பா கண்டத்தை அவசர அவசரமாக வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.
உக்ரைன் போரில் விளாடிமிர் புடின் வெற்றி பெற்றால், 2030 ஆம் ஆண்டு வாக்கில் ரஷ்யா இன்னொரு போருக்கு தயாராகக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது.
மேலும் ரஷ்யாவுடன் ஒரு பெரிய அளவிலான போருக்கு ஐரோப்பிய நாடுகள் தயாராக வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது. மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களை ஒரு கொடூரமான போருக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளை ரகசியமாகத் துவங்கியுள்ளன.
அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடன் இணைய பிரித்தானியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படையெடுப்புகளில் இருந்து தப்பிப்பிழைப்பது எப்படி என்பது குறித்து தனது குடிமக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிடும் சமீபத்திய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
20 பக்கங்களைக் கொண்ட இந்த சிறு புத்தகம், படையெடுப்பை எதிர்கொண்டு குடியரசை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பிரெஞ்சு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கும். இதில், துணைப் படைகள் அல்லது உள்ளூர் பாதுகாப்பு முயற்சிகளில் சேரவும் கோரப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஆறு லிற்றர் தண்ணீர், பதப்படுத்தப்பட்ட உணவு, பேற்றரிகள் மற்றும் அடிப்படை மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் உயிர்வாழும் கருவியை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த உதவிக்குறிப்புகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
800,000 நேட்டோ துருப்பு
இதனிடையே, பிரான்சின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு அரணில் ஜேர்மனி கொண்டுவரப்படும். ஜேர்மனி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால், பிரான்ஸ் பதிலடி அளிக்கும். போலந்தும் தற்போது பிரான்சின் பாதுகாப்பு வட்டத்தைக் கோரியுள்ளது, பிரான்சும் அனுமதி அளிக்கும் என்றே நம்பப்படுகிறது.
அமெரிக்கா அல்லது பிரான்சின் பாதுகாப்பு வளையத்தில் இருக்கவே போலந்து திட்டமிட்டு வருகிறது. பால்டிக் மற்றும் நோர்டிக் நாடுகள் ரஷ்யா ஏற்படுத்தும் அச்சுறுத்தலை நன்கு அறிந்திருக்கின்றன, ஏனெனில் அவை அனைத்தும் ஏற்கனவே ஏதோ ஒரு வகையான கட்டாய இராணுவ சேவையை நடைமுறையில் கொண்டுள்ளன.
ஜேர்மனியின் மூன்றாம் உலகப் போர் தயாரிப்புத் திட்டங்கள் ஏற்கனவே 1,000 பக்க ரகசிய ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 2022 முதல் உக்ரைனில் புடின் கட்டவிழ்த்துவிட்ட அட்டூழியங்களைக் கண்ட பிறகு, ஸ்வீடனும் பின்லாந்தும் தங்களின் நடுநிலைமையை கைவிட்டு சமீபத்தில் நேட்டோவில் இணைந்தன.
ரஷ்யாவுடன் முழுமையான போர் வெடித்தால், ஜேர்மனி 200,000 இராணுவ வாகனங்களையும் 800,000 நேட்டோ துருப்புக்களையும் அதன் எல்லை முழுவதும் நகர்த்தத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியம் தனது படைகளை மீண்டும் கட்டியெழுப்பவும் உக்ரைனை ஆதரிக்கவும் ஒரு மகத்தான செலவினத் திட்டத்தையும் தொடங்கியுள்ளது. பாதுகாப்புக்கு என ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 800 பில்லியன் யூரோ தொகையை செலவிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |