இந்த தீவு நாட்டை விட்டு அதிகமான குடிமக்கள் வெளியேறுவது ஏன்? என்ன காரணம்
தீவு நாட்டில் ஒன்றில் இருந்து குடிமக்கள் அதிகமாக வெளியேறுவதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.
எந்த தீவு நாடு?
இந்தியாவில் இருந்து பிரபலமான தீவு நாடான நியூசிலாந்திற்கு அதிகமான மக்கள் குடியேறுவார்கள். ஆனால், நியூசிலாந்து தற்போது புதிய சவாலை எதிர்கொள்கிறது.
ஏனெனில் அங்குள்ள குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் நாட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நாட்டிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிலும் அதிகமாக இளைஞர்கள் தான் வெளியேறுகிறார்கள்.அதாவது வெளியேறுபவர்களில், 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 38 சதவீதம் பேர் உள்ளனர்.
ஜூன் 2025 படி கிட்டத்தட்ட 72,000 குடிமக்கள் தங்கள் தாய்நாட்டிற்கு விடைபெறுவதாக நியூசிலாந்து புள்ளிவிவரங்கள் புதிய தரவுகளை வெளியிட்டுள்ளன.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரம் மந்தமடைந்து வேலை வாய்ப்புகள் சரிந்து வருவது தான்.
1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிவி மக்கள் வெளியேற்றத்திற்கு குறைந்த உற்பத்தி நிலைகள் மற்றும் பல கொள்கை தவறுகள் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நாட்டில் வேலையின்மை இரண்டாவது காலாண்டில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.2 சதவீதமாக உள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டிலிருந்து புதிய வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைந்துள்ளது. அதோடு, கடந்த ஆண்டு முதல் பொருளாதாரத்தை ஆதரிக்க நியூசிலாந்து ரிசர்வ் வங்கி அதன் ரொக்க விகிதத்தை 225 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.
வாழ்க்கைச் செலவு மற்றும் குறைவான வேலை வாய்ப்புகளால் சலித்துப்போன நியூசிலாந்து மக்கள், அண்டை நாடான அவுஸ்திரேலியா, பிரிட்டன் அல்லது வேறு இடங்களுக்கு செல்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவுஸ்திரேலியாவை சிறந்த தேர்வாக தேர்ந்தெடுப்பதற்கு காரணம் என்னவென்றால் நியூசிலாந்து மக்களுக்கு அங்கு வேலை செய்ய விசா தேவையில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |