தூக்கத்தில் திடீரென கீழே விழுவது போல தோன்றுவதற்கான காரணம் என்ன தெரியுமா?
தூக்கத்தின் போது சில நேரம் திடீரென கீழே விழுவது போல தோன்றுவது எதனால் என்று பார்க்கலாம்.
தூக்கத்தின்போது திடீரென பெரிய கட்டடத்தின் மேல் இருந்து கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதை ஹிப்னிக் ஜெர்க் என குறிப்பிடுவர்.
தூக்கத்தில் கனவு வரும் நிலைக்கும், தூங்க தயாராகும் நிலைக்கும் இடையிலானதுதான் இந்த ஹிப்னிக் ஜெர்க் என சொல்லப்படுகிறது.

இறுக்கமாக இருக்கும் தசைகளை தளர்த்துவதற்காக, பெரிய இடத்திலிருந்து விழுவது போன்ற கனவை மூளை உருவாக்கும்.
இதனால் உடல் தானாக ஜெர்க் ஆகி பின் சுதாரித்துக் கொண்டு தளர்வாகிறது ஆகிறது. இதை தூக்கத்தின் தொடக்கம் என்றும் சொல்கின்றனர்.
சில ஆய்வுகள் நாம் பாதுகாப்பான இடத்தில் தூங்குகின்றோமா என்பதை உறுதி செய்ய இப்படி ஏற்படுகிறது என சொல்கிறது.

மிகவும் சோர்வாக இருப்பதனாலும், உடலுக்கு வசதியில்லாத நிலையில் உறங்கும்போது இதை ஏற்படுத்தும்.
அதேபோல், மன அழுத்தம், பதற்றம் அதிகம் இருப்பவர்களுக்கும் இவ்வகை ஜர்க் ஏற்படக்கூடும் என சொல்லப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |