இந்த அமெரிக்கா போர் விமான ஹெல்மெட் விலை ஃபெராரியை விட அதிகம் - ஏன் தெரியுமா?
F-35 போர் விமான ஹெல்மெட் ஏன் ஃபெராரி காரை விலை அதிகம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
F-35 விமான ஹெல்மெட்
உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்று அமெரிக்காவின் F-35 lightning II போர் விமானம்.
இந்த விமானத்தை இயக்கும் விமானிகளின் ஹெல்மெட் விலை, ஆடம்பர காரான ஃபெராரியை விட விலை அதிகம் ஆகும்.
இந்த ஹெல்மெட் ஒன்றின் விலை 4,00,000 டொலர்கள்(இந்தியா மதிப்பில் ஏறத்தாழ ரூ. 4 கோடி) ஆகும்.
இந்த ஹெல்மெட்டினை, இஸ்ரேலை சேர்ந்த Elbit Systems மற்றும் அமெரிக்காவின் rockwell collins நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகிறது.
எப்படி உருவாக்கப்படும்?
ஒவ்வொரு விமானிக்கும் ஏற்றவாறு தனி தனியாக இந்த ஹெல்மெட் தயாரிக்கப்படுகிறது. இதற்காக விமானிகள் 2 நாட்கள் தனி அறையில் அமர வைக்கப்பட்டு அவர்களது தலை ஸ்கேன் செய்யப்படுகிறது.
சிறியளவிலான எடை மாறுதல், சிகையலங்காரம்(haircut) கூட சமநிலை மற்றும் செயல்திறனை பாதிக்கும்.
ஒவ்வொரு ஹெல்மெட்டும், 2 மில்லிமீட்டர் துல்லியத்திற்குள் ஒரு பப்புலோமீட்டர் மூலம் சீரமைப்புக்கு உட்படுகிறது.
105 நாட்களுக்கு ஒருமுறை ஹெல்மெட் சோதிக்கப்படுகிறது. பெரும்பாலும் விமானி, சிறிய மாற்றங்களுடன் தன்னுடைய சேவை முழுவதும் ஒரே ஹெல்மட் மட்டுமே பயன்படுத்துவார்.
சிறப்பம்சங்கள்
வழக்கமாக விமானங்களில் இருக்கும் நிலையான HUD(Head-Up Display) வை நீக்கி, ஹெல்மெட்டில் அந்த வசதிகளை ஏற்படுத்தியுள்ள முதல் விமானம் இதுவாகும். இது காக்பிட்டின் எடையை குறைக்கவும் உதவுகிறது.
இந்த ஹெல்மெட் ஒரு மெய்நிகர் HUD ஆக செயல்படுகிறது. விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள 6 கேமராக்கள் மூலம் வெளிப்புறத்தில் உள்ளதை நிகழ் நேர நேரலையாக காண முடியும்.
இது DAS (Distributed Aperture System)அம்சம் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம், விமானத்தின் தரவு மற்றும் இலக்குகளை காண முடியும்.
விலை ஏன் அதிகம்?
இந்த ஹெல்மெட் ஒவ்வொரு விமானிக்கு தனி தனியாக தயாரிக்கப்படுவதோடு, ஒரு ஹெல்மெட் தயாரிக்க 2 நாட்கள் தேவைப்படுகிறது.
மேலும், குறைந்த எடை மற்றும் அதிக பாதுகாப்பு வழங்கும் வகையில், Kevlar மற்றும் carbon fibre கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இதன் வடிவமைப்பு F-35 இன் அதிநவீன ஏவியோனிக்ஸ் மற்றும் மென்பொருளுடன் தடையின்றி ஒருங்கிணைக்க வேண்டும்.
இது போன்ற பல்வேறு காரணங்களால், இதன் விலை ஃபெராரி காரின் விலையை விட அதிகமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |