8 பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பத்தை கொண்டாடும் ரஷ்யா... வெளிவரும் பின்னணி
ரஷ்யாவில் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தை தெரிவு செய்து உயரிய விருதளித்து விளாடிமிர் புடின் அரசாங்கம் கெளரவித்து வருகிறது.
ரஷ்யாவின் உயரிய விருது
மாஸ்கோவை சேர்ந்த Vera மற்றும் Timofey Asachyov குடும்பமானது இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய குடும்பமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 8 பிள்ளைகள் கொண்ட Vera மற்றும் Timofey Asachyov குடும்பமானது ரஷ்யாவின் உயரிய விருதுகளில் ஒன்றான Order of Parental Glory என்ற விருதையும் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் நகரம் முழுக்க அந்த குடும்பத்தினர் தொடர்பிலான விளம்பரப் பதாகைகள் நிரம்பி காணப்படுகிறது. ஏனெனில் ரஷ்யாவின் பிறப்பு விகிதம் கால் நூற்றாண்டில் மிகக் குறைவாக பதிவாகியுள்ளது.
இதனாலையே, ரஷ்ய குடும்பங்கள் இனி Vera மற்றும் Timofey Asachyov குடும்பம் போன்று மாற வேண்டும் என மறைமுகமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரஷ்யாவில் 599,600 குழந்தைகள் பிறந்ததாக உத்தியோகப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
இது 2023 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 16,000 குறைவு மற்றும் 1999 க்குப் பிறகு மிகக் குறைவு என்றே கூறப்படுகிறது. இப்படியான நிலை ரஷ்ய சமூகத்திற்கு பேரழிவு என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள பெற்றோர்களை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது.
பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை
இதன் முதல் நடவடிக்கையாக, பிள்ளைகள் இல்லாத குடும்பம் என்ற போக்கினை மாற்ற கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை என்பதை இனி எவரேனும் ஊக்குவித்தால் அவர்கள் அபராதம் செலுத்த நேரிடும்.
ரஷ்யாவில் பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை என நிலை ஊடுருவி இருந்தால், அதற்கான காரணங்கள் இருப்பதாகவே கூறுகின்றனர். ரஷ்யாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திருமணமான பெண்கள் மூன்று பிள்ளைகள் குறைந்தபட்சம் பெற்றுக்கொள்ள வேண்டும் என முன்னர் ஜனாதிபதி புடின் ஊக்குவித்து வந்தார்.
இருப்பினும், பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாமல் இருக்க பெண்களுக்கு முழு உரிமை உண்டு என்பதையும் ரஷ்ய சட்டங்கள் வலியுறுத்துகிறது. தற்போது ரஷ்யா முழுக்க வேரோடியுள்ள பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை என்ற பரப்புரையானது மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |