அன்று தீவிராதி பின்லேடனை தியாகி என்று இம்ரான்கான் கூறியது ஏன்? தற்போது கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஒசாமா பின்லேடனை தியாகி என்று கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து தற்போது அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடம் என அமெரிக்கா ஒரு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. இதனால் இதற்கு பதில் அளிக்கும் விதமாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். அந்நாட்டு பாராளுமன்றத்தில், அபோட்டாபாத்தில் ஒசாமா பின்லேடனை அமெரிக்கர்கள் கொன்றனர்.
அவர் ஒரு தியாகி. அமெரிக்கா நம் நாட்டிற்குள் நுழைந்து நம்மிடம் கூட சொல்லாமல் ஒருவரைக் கொன்றது பெரிய அவமானம் என்று கூறினார். இம்ரான்கானின் இந்த பேச்சு, உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது, அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு அந்நாட்டு மத்திய அமைச்சர் பாவத் சவுத்ரி, இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்து ஐ.நா.,வில் பாகிஸ்தான் வாக்களித்ததையும் சுட்டிக்காட்டினார்.
ஒசாமா பின்லேடன் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகளை ஐ.நா., சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்ததையும் ஆதரித்தோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் நிறைய தியாகம் செய்துள்ளது. ஒசாமா பின்லேடன் ஒரு பயங்கரவாதி, அல்கொய்தா ஒரு பயங்கரவாத இயக்கம் என்றே பாகிஸ்தான் கருதுகிறது.
இதனால், அன்று இம்ரான்கான் வாய்தவறி பின்லேடனை தியாகி என்று சொல்லிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.