உலகில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே நாடு - எது தெரியுமா?
உலகில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே நாடு குறித்தும்,அதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஒரு நாட்டிற்கு 3 தலைநகரங்கள்
வழக்கமாக உலகின் அனைத்து நாடு மற்றும் மாநிலங்களுக்கு தலைநகரங்கள் இருக்கும். உதாரணமாக இந்தியாவிற்கு புது டெல்லி தலைநகராக உள்ளது.

அந்த தலைநகரில் தான் இந்தியாவின் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளது.தலைநகரில் இருந்து தான் அரசு நிர்வாகம் இயங்கும்.
இதே போல் இலங்கை உள்ளிட்ட 9 நாடுகளுக்கு 2 தலைநகரங்கள் உள்ளது. இலங்கையின் நிர்வாக மற்றும் நீதித்துறை தலைநகராக கொழும்புவும், சட்டமன்ற தலைநகராக ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டேவும் உள்ளது.
ஆனால், தென் ஆப்பிரிக்கா மட்டும் உலகில் 3 தலைநகரங்களை வைத்துள்ள ஒரே நாடாக உள்ளது.

பிரிட்டோரியா, ப்ளூம்பொன்டின் மற்றும் கேப் டவுன் ஆகிய 3 தலைநகரங்கள் தென் ஆப்பிரிக்காவில் உள்ளது.
1910 ஆம் ஆண்டில், பல்வேறு பிராந்தியங்களை ஒன்றிணைத்து தென் ஆப்பிரிக்கா ஒன்றியமாக உருவாக்கப்படும் முன்னர், கேப் காலனி, நடால், டிரான்ஸ்வால் மற்றும் ஆரஞ்சு நிவர் காலனி என 4 சக்தி வாய்ந்த காலணிகளாக இருந்தது.
அப்போது ஒவ்வொரு காலணியும் தங்கள் பகுதியிலே தலைநகரம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தின. இதனால் 3 தலைநகரங்கள் உருவாக்கப்பட்டு, அதிகாரம் பரவலாக்கப்பட்டது.
பிரிட்டோரியா

Credit : www.reddit.com
இதன்படி, தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கௌடெங் மாகாணத்தில் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகில் அமைந்துள்ள பிரிட்டோரியா, நிர்வாகத் தலைநகராக உள்ளது. இங்கு ஜனாதிபதி அலுவலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலங்கள் செயல்படுகின்றன.
கேப் டவுன்
தென்னாப்பிரிக்காவின் தென்மேற்கு மூலையில் மேற்கு கேப் மாகாணத்தில் அமைந்துள்ள கேப் டவுன், சட்டமன்றத் தலைநகராக உள்ளது. இது, மக்கள்தொகை அடிப்படையில் இரண்டாவது பெரிய நகரமாகும்.

Credit : www.cntraveller.in
இது தேசிய சட்டமன்றம் மற்றும் தேசிய மாகாண சபை உள்ளிட்ட நாட்டின் சட்டமன்ற நாடாளுமன்றத்தின் தாயகமாகும்.
1990 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு நெல்சன் மண்டேலா தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தியதும் இங்குதான்.
ப்ளூம்ஃபோன்டைன்

Credit : www.goway.com
தென்னாப்பிரிக்காவின் மையத்தில் உள்ள ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் அமைந்துள்ள ப்ளூம்ஃபோன்டைன், நீதித்துறை தலைநகராக உள்ளது. மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றம் இங்கு அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |