258 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கித்தவிப்பது ஏன்? எலான் மஸ்க் பகீர் தகவல்
சுனிதா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் விண்வெளியில் சிக்கித் தவிப்பதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக எலான் மஸ்க் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
258 நாட்களாக விண்வெளியில்...
விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் 258 நாட்களாக விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ளதன் பின்னணியில் முந்தைய ஜோ பைடன் அரசு இருப்பதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக அவர்கள் விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், ஜோ பைடன் அரசு அவர்களை திட்டமிட்டே கைவிட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் கோரிக்கையின்பேரில் அவர்களை பூமிக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திவருவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |