3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப்
கிரீன்லாந்தை கைப்பற்றவதன் மூலம் அமெரிக்கா அடைய நினைக்கும் இலக்குகள் என்ன? அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் இறங்கினால், ஈரான் எவ்வாறு எதிர்வினையாற்றும் என அதிர்வு நிகழ்வில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
3ஆம் உலக போரின் தொடக்கமா?
சமீபத்தில் வெனிசுலாவில் தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிறையில் அடைந்துள்ளது.

இந்த நிகழ்வு உலக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

Credit : AP/PTI
கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒரு பகுதியாகும். டிரம்ப்பின் இந்த முயற்சிக்கு டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதே போல், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், "போராட்டத்தை கைவிடாதீர்கள், தொடர்ந்து போராடுங்கள். உங்களுக்க்கான உதவி வந்து கொண்டிருக்கிறது என டிரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்துள்ளார்.
மேலும், போராட்டக்கார்களை அரசு கொன்றால் ராணுவ நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளார். இதனால், ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மூலம் ஆட்சி மாற்றத்திற்கு முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Credit : AFP
இவ்வாறாக, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்போவில் பெரும் போர் பதற்றத்தை டிரம்ப் ஏற்படுத்துவதன் மூலம் 3 ஆம் உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், கிரீன்லாந்தை கைப்பற்றவதன் மூலம் அமெரிக்கா அடைய நினைக்கும் ராணுவ பொருளாதார இலக்குகள் என்ன?, அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் இறங்கினால் அதற்கு ஈரான் எவ்வாறு எதிர்வினையாற்றும் என இன்றைய அதிர்வு நிகழ்வில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவைக் காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |