கண்ணீர் விட்டழுத விஜய்., விஜயகாந்த் உடலை பார்த்து நொறுங்கி நின்றது ஏன்?
எந்தவொரு நிகழ்வுகளிலும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டாத நடிகர் விஜய், நேற்று கேப்டன் விஜயகாந்த்-க்கு இறுதி மரியாதை செலுத்திய போது மனம் உடைந்து நின்றது கவனம் பெற்றுள்ளது.
நம்மை விட்டு பிரிந்தார் விஜயகாந்த்
தமிழ் திரையுலகிலும், தமிழக அரசியலும் முக்கிய ஆளுமையாக இருந்தவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த், நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக போராடி வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சென்னை மியாட் மருத்துவமனையில் கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டும், இந்த மண்ணுலகை விட்டும் பிரிந்து இயற்கை எய்தினார்.
பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலிக்காக நேற்று அவரது பூத உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
நடிகர் விஜய் அஞ்சலி
பல்வேறு தரப்பினரும் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நேரில் நேற்று அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், நேற்று இரவு நடிகர் விஜய் விஜயகாந்த அவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பொதுவாக பொது நிகழ்வுகளில் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாத நடிகர் விஜய், நேற்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மிகவும் இறுக்கமாக காணப்பட்டார். கேப்டன் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டியில் கை வைத்து அங்கேயே கண்ணீர் விட்டு சோகத்தில் முழ்கினார்.
That last look speaks volume💔 @actorvijay #RIPCaptain #CaptainVijayakanth #ThalapathyVijay #MansoorAliKhan #RIPVijayakanth #Captain #Cineulagam pic.twitter.com/hBiiIgOAt2
— Cineulagam (@cineulagam) December 28, 2023
உடைந்து போய் நின்ற நடிகர் விஜய், கேப்டன் அவர்களின் முகத்தை பார்த்தவாறு அப்படியே சில வினாடிகள் உறைந்து போய் நின்றார்.
மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்ட விஜய், சோகத்தின் ஒட்டுமொத்த உருவமாக நின்றார், இத்தனை துயரத்தில் விஜய்யின் முகத்தை இதுவரை பார்த்திராத ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
விஜய் இவ்வளவு சோகத்தில் மூழ்குவதற்கான காரணம் என்ன?
விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கு வழி அமைத்து கொடுத்தவர் என்றால் விஜயகாந்த் அவர்களை தான் சொல்ல வேண்டும். விஜயகாந்த் நடித்த வெற்றி திரைப்படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதையடுத்து தொடர்ந்து விஜயகாந்த் தன்னுடைய வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, குடும்பம் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்.
எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிவு செய்தார்.
Gone but not forgotten ❤️
— Sarwan KP (@sarwankp_offl) December 28, 2023
The one who actually introduced #ThalapathyVijay to this world.
Thank you captain for everything you have done to our people, heard a lot about your good deeds, you will be remembered forever. #Vijayakanth #CaptainVijayakanth #RIPCAPTAIN pic.twitter.com/gxgdL7JslC
இவ்வாறு விஜயை திரைத்துறையில் தொடர்ந்து ஆதரித்து வந்தவர் விஜயகாந்த் தான். இந்த நன்றி உணர்வின் வெளிப்படை தான், நேற்று விஜயகாந்த் அவர்களின் பூத உடலுக்கு மரியாதை செய்யும் போது நடிகர் விஜய் அத்தனை உணர்ச்சிகரமாக காணப்பட்டதற்கு முக்கிய காரணம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Vijayakanth, DMDK, Tamil Nadu, Actor Vijay, Thalapathy Vijay,