வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை ஏன்? நாராயண மூர்த்தி கொடுத்த புது விளக்கம்
வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியது தொடர்பாக இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
நாராயண மூர்த்தி விளக்கம்
இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இவரது மனைவி சுதா மூர்த்தி சமூக சேவைகள் செய்து வருகிறார்.
இவர் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவர் பேசும் சில கருத்துக்களும் சர்ச்சையாக மாறியது.
முன்னதாக, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று நாராயண மூர்த்தி பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வது உடல் மற்றும் மன ரீதியான நீண்டகால தாகத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் சகூறும் நிலையில் நாராயண மூர்த்தி பேசிய கருத்து பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாராயண மூர்த்தி, " இந்தியாவில் மொத்தம் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி வாங்குகிறார்கள்.
அப்படி என்றால் இவ்வளவு பேர் இந்தியாவில் வறுமையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதனால், இளைஞர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். நமது நாடு இரக்கமுள்ள முதலாளித்துவமாக செயல்படுகிறது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |