விமானத்தில் பயணம் செய்யும் போது மது அருந்தினால் என்ன நடக்கும்?
தற்போதைய காலகட்டத்தை பொறுத்தளவில் விமானத்தில் பயணம் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல மிகக் குறைவான நேரமே எடுகிறது. மக்கள் விமானங்களை பயன்படுத்துவதற்கு காரணமும் இதுவே.
இதன்போது பலர் மது அருந்துவார்கள். இது செய்வதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் விமானத்தில் இருந்து மது அருந்தினால் என்ன நடக்கும் என்று குறித்து பார்க்கலாம்.
விமானத்தில் மது அருந்துவதால் என்ன நடக்கும்?
விமான பயணத்தின் போது மது அருந்துவதும் உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
விமானத்தில் காற்றழுத்தம் குறையும் போதும் மது அருந்திய பின் தூங்குவதும் ஒட்சிசனின் அளவைக் குறைக்கிறது.
அதன்போது உங்களுடைய இதய துடிப்பு அதிகரிக்கும்.
நீங்கள் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்து, மது அருந்தினால், உங்கள் உடல்நிலை திடீரென மோசமடையக்கூடும்.
அத்தகைய சூழ்நிலையில், குறிப்பாக வயதானவர்கள் மது அருந்தக்கூடாது. ஏனெனில் உயரம் உயர, காற்றழுத்தம் குறையும். அதன்போது பாரிய ஆபத்து ஏற்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |