இறந்த கணவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்ற மனைவி, 3 மகள்கள் விபத்தில் சிக்கி மரணம்
இறந்த கணவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்ற மனைவி மற்றும் 3 மகள்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கணவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்ற மனைவி
இந்திய மாநிலம் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தனிராம்(75). இவர் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி சவிதா(70), மகள்கள் மஞ்சுளா(45), அஞ்சலி(40), ரூபி(30).
இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மூச்சு விட முடியாமல் தவித்தார். பின்னர் இவர் கடந்த ஜூலை 24 ஆம் திகதி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவர்கள், அவரை கான்பூரில் உள்ள லாலா லஜ்பதி ராய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறினார். பின்பு, அந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அப்போது, அவரது உடலை மனைவி மற்றும் மூன்று மகள்கள் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று வீட்டிற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
விபத்தில் சிக்கி மனைவி, மகள்கள் உயிரிழப்பு
இந்நிலையில், பூர்வா-மோகன்லால்கஞ்ச் சாலையில் உள்ள துஸ்ரூர் கிராமத்தின் வழியே ஆம்புலன்ஸ் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. அதில், ஆம்புலன்ஸ் சுக்குநூறாக நொறுங்கியது.
இதில், ஆம்புலன்சில் இருந்த தனிராமின் மனைவி மற்றும் 3 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்து வந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சித்தார்த் சங்கர் மீனா, ஏஎஸ்பி சசி சேகர், சிஓ தீபக் சிங் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து எஸ்.பி சித்தார்த் சங்கர் மீனா கூறும் போது,"ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் இருப்பிடத்தை தேடித் கொண்டிருக்கிறோம். அவர் சிக்கினால் மட்டுமே விபத்தின் கூடுதல் தகவல்களை சேகரிக்க முடியும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |