எங்களை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்துவிடுகிறேன்: சீமான்
பாரதிய ஜனதா கட்சியானது நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்கு சதவீதம் பெற்றால் கட்சியை கலைத்துவிடுகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.
சீமான் பேசியது
சிவந்தி ஆதித்தனாரின் நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலை நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் மாலை அணிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோரமண்டல் நச்சு ஆலை தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு ஆலையை திறக்க விடக்கூடாது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஆலையை திறக்க விடாது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களை திருடர்கள் போல சித்தரிக்கிறார். இந்த மாதிரியான பேச்சை ஏப்ரல் 19 -ம் திகதிக்கு முன்பு பேசியிருக்க வேண்டியது தானே?
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேசி திமுக நிறுத்த வேண்டியதுதானே?" என்றார்.
அதோடு, தென்மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய சக்தியாக வரும் என்று அண்ணாமலை கூறுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஜூன் 4 -ம் திகதிக்கு பிறகு பாஜக பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு என்று தெரிந்து விடும்.
கூட்டணி இல்லாமல் தனித்த பாஜகவின் வாக்குகள் நாம் தமிழர் கட்சியை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிடுகிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |