அப்பாவாகிறார் புடின்?: இரகசிய காதலி மீண்டும் கர்ப்பமானதால் அதிர்ச்சி....
புடினுடைய இரகசிய காதலி மீண்டும் கர்ப்பமுற்றிருப்பதாகவும், தான் அப்பாவாவதை எதிர்பார்க்காததால் புடின் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் தங்க மங்கையான Alina Kabaeva (38)க்கும் ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினுக்கும் 2008ஆம் ஆண்டு முதலே இரகசிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை அதை புடின் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில், ரஷ்ய செய்தி சேனல் ஒன்று, Alina மீண்டும் கர்ப்பமுற்றிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இது திட்டமிட்ட கர்ப்பம் அல்ல என்பதால், தன் இரகசிய காதலி மீண்டும் கர்ப்பமடைந்ததால் புடின் அதிர்ச்சியடைந்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு அசாதாரண சூழலில் தன் காதலி கர்ப்பமுற்றிருப்பதால் புடின் மனச்சோர்வுடன் காணப்பட்டதாக அவரை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.