2026 தேர்தலுக்கு மதுரையில் பிரச்சாரம் செய்வீர்களா? நடிகர் சூரி சொன்ன பதில்
மதுரை மண்ணின் மைந்தனாக 2026 தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு நடிகர் சூரி பதில் அளித்துள்ளார்.
சூரி பதில்
நடிகர் சூரி, நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ராஜ்கிராண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் திரையங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மாமன் திரைப்படத்தின் வரவேற்பு குறித்து நடிகர் சூரி பேசுகையில், "மாமன் திரைப்படம் உணர்வு ரீதியாக வெற்றியை கொடுத்துள்ளது. வருடத்திற்கு இது போன்ற வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்று எனது ஆசை.
இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தில் ஒருவனாக சென்றடைந்திருக்கிறேன். குடும்பமாக வந்து பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
மேலும் அவரிடம் 2026 தேர்தலில் மதுரை மைந்தனாக பிரச்சாரம் செய்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " மண்ணின் மைந்தனாக சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்.
சினிமாவில் என்னை தக்க வைப்பதற்கு நிறைய வேலை செய்ய வேண்டும். நீங்கள் நினைப்பது எப்போது என்று எனக்கு தெரியாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |