ரூ.25 கோடி நஷ்ட ஈடு வேண்டும் .. ஒப்பந்தம் மீறியதால் முன்னாள் ஊழியர் மீது வழக்கு தொடர்ந்த Wipro நிறுவனம்
வேறு நிறுவனத்திற்கு மாறிய முன்னாள் ஊழியரிடம் நஷ்ட ஈடு கேட்டு விப்ரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
விப்ரோ நிறுவனம்
தற்போதைய காலத்தில் இளைஞர்கள் மென்பொருள் துறையை தான் தேர்வு செய்கின்றனர். ஏசி அறை, அதிக நாள் விடுப்பு, அதிக சம்பளம் என பல காரணங்களால் அவர்கள் அந்த துறையை விரும்புகின்றனர்.
ஆனால், அவர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்திற்கு மாறுவதற்கு பல்வேறு தடைகள் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் பணியாளர்கள் மற்ற நிறுவனத்தில் சேர்வதை தடுக்கும் விதமாக "நான்-காம்படீஷன்" (non-competition) ஒப்பந்தங்கள் போடுகின்றன.
இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களின் ஒருவரான அஜிம் பிரேம்ஜி (Azim Premji) என்பவர் தொடங்கிய மென்பொருள் நிறுவனம் தான் விப்ரோ (Wipro).
இந்நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் போட்டி நிறுவனத்தில் பணிபுரிவதை தடுக்கும் விதமாக சுமார் 12 மாதங்களுக்கு தடை செய்திருந்தது.
நஷ்ட ஈடு கேட்டு விப்ரோ
இந்நிலையில், விப்ரோ நிறுவனத்தில் 2002 -ம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக தலைமை நிதி அதிகாரியாக பணி புரிந்தவர் ஜதின் தலால் (Jatin Dalal). இவர், தேசிய தொழில்நுட்ப மையத்தில் (National Institute of Technology) பொறியியல் பட்டம் பெற்றவர்.
இவரது ஆண்டு ஊதியம் விப்ரோ நிறுவனத்தில் ரூ.12 கோடியாக இருந்த நிலையில் ரூ.8 கோடியாக குறைந்தது.
இதனால் அவர், விப்ரோ நிறுவனத்தில் ராஜினாமா செய்துவிட்டு, 3 மாதங்களிலே காக்னிசன்ட் (Cognizant) எனும் வேறொரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்தார்.
இதனால் விப்ரோ நிறுவனம், ரூ.25,15,52,875.00 நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, ஜனவரி 3 -ம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே, ஜதின் தலால் (Jatin Dalal) -க்கு காக்னிசன்ட் நிறுவனத்தில் ரூ.43 கோடி ஆண்டு ஊதியம் என்பது குறிப்பிடதக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |