20க்கும் மேற்பட்ட பெண்கள்..வேலை வாங்கி தருவதாக கூறி துஷ்பிரயோகம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் முன்னாள் தலைமைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பெண் குற்றச்சாட்டு
தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் முன்னாள் தலைமைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர் இருவரும் பணியிடை நீக்கம்
அந்தமான், நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் 20க்கும் மேற்பட்ட பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜேந்திர நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர்.எல்.ரிஷி ஆகியோர் தன்னை கூட்டு வன்புணர்வு செய்ததாக பெண்ணொருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில் 20கும் மேற்பட்ட பெண்களை வேலை வாங்கித் தருவதாக கூறி வன்புணர்வு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 'ரிஷி என்னை தலைமை செயலாளரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு மதுபானம் கொடுக்கப்பட்டபோது நான் மறுத்துவிட்டேன். அதனைத் தொடர்ந்து இருவரும் என்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தனர். இரண்டு வாரங்களுக்கு பிறகு இதே போல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து வெளியே சொல்லக் கூடாது என்று என்னை மிரட்டினர்' என கூறியிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த நரேன், எப்.ஐ.ஆர்-யில் கொடுக்கப்பட்ட இரண்டு திகதி ஒன்றில் தான் போர்ட் பிளேயரில் இருந்ததாக கூறி, புதுடெல்லியில் தான் இருந்ததை நிரூபிக்க விமான பயணசீட்டுகள் மற்றும் சந்தித்தவர்கள் பட்டியலை ஆகியவற்றை மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னதாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர் இருவரின் செல்போன்களில் உள்ள உரையாடல் பதிவுகள் அழிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. அத்துடன் தலைமை செயலாளர் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் தொடர்பிலான ஹார்ட் டிஸ்க் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Shutterstock
கடந்த 17ஆம் திகதி உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் இடைநீக்கம் செய்யப்பட்ட நரேன், நவம்பர் 14ஆம் திகதி வரை இடைக்கால பிணை பெற்றார்.
ஆனால் அவரது பிணையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.