40 ஆண்டுகளாக சிரிக்கவில்லை - சுருக்கங்களை தவிர்க்க முகத்தை கட்டுப்படுத்திய பெண்
பிரித்தானியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் என்ற பெண், கடந்த 40 ஆண்டுகளாக சிரிக்காமல் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.
முகத்தில் சுருக்கங்கள் உருவாகாமல் தடுக்கவேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக அவர் இவ்வாறு இருக்கிறார்.
“சிரிப்பு முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்தும். நான் முக தசைகளை கட்டுப்படுத்தி, சிரிப்பைத் தவிர்த்ததால், இன்று வரை முகத்தில் சுருக்கம் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டியன், பாட்டாக்ஸ் அல்லது விலையுயர்ந்த அழகு சிகிச்சைகளை எதையும் பயன்படுத்தவில்லை என்றும், சிரிக்காமல் இருந்து இயற்கையாகவே முகத்தை இளமையாக வைத்திருக்க முடிந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிலர், “சிரிக்காமல் வாழ்வது வாழ்க்கையின் மகிழ்ச்சியை இழப்பதாகும்” என விமர்சித்துள்ளனர்.

மற்றவர்கள், “சுருக்கங்கள் வாழ்க்கையின் அனுபவங்களின் அடையாளம்” எனக் கூறி, சிரிப்பைத் தவிர்ப்பது தவறான முடிவு என கூறியுள்ளனர்.
பலரும், “வாழ்க்கையில் சிரிப்பு, மகிழ்ச்சி முக்கியம். சுருக்கங்கள் இயற்கையானவை, அவை அழகை குறைக்காது” என கருத்து தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்டியனின் 40 ஆண்டுகள் சிரிப்பில்லா வாழ்க்கை, அழகு மற்றும் மகிழ்ச்சி குறித்த சமூக விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |