கொதிக்கும் கேரமல் தொட்டியில் உயிருடன் சமாதியான பெண்: சொக்லெட் தொழிற்சாலையில் கோர சம்பவம்
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் சொக்லெட் தொழிற்சாலையில் பெரிய கேரமல் தொட்டி ஒன்றில் தவறி விழுந்து ஊழியர் ஒருவர் உயிருடன் சமாதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரமல் தொட்டியில் விழுந்து
குறித்த பெண் ஊழியரின் கால்கள் திடீரென்று வெளியே தெரிந்த நிலையிலேயே சக ஊழியர்கள் நடந்த சம்பவத்தை உணர்ந்துள்ளனர். 36 வயதான Natalia Nemets என்பவரே, கேரமல் தொட்டியில் விழுந்து உயிருடன் உடல் வெந்து இறந்தவர்.
Image: EAST2WESTNEWS
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்து போன சக ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர். கேரமல் தொட்டியை Natalia Nemets சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது, திடீரென்று கொதிக்கும் சொக்லெட் அந்த தொட்டிக்குள் கொட்டப்பட்டுள்ளது.
எதிர்பாராத இந்த சம்பவத்தால் Natalia Nemets கத்தவோ உதவிக்கு அழைக்கவோ இல்லை என்றும், இதனால் சக ஊழியர்களுக்கு இந்த விபத்து குறித்து தெரியாமல் போனது என்றும் கூறப்படுகிறது.
யாராலும் விளக்க முடியவில்லை
இதனையடுத்து, அந்த பெரிய தொட்டியில் உள்ள மொத்த சொக்லெட்டும் வெளியே கொட்டப்பட்டு, அதன் பின்னர் அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது Natalia Nemets அவரது இருக்கையில் இல்லை என்பதை சக ஊழியர்கள் உறுதி செய்திருந்தாலும், அவர்கள் கேரமல் தொட்டியில் தவறி விழுந்துள்ளார் என்பதை கண்டுபிடிக்க தவறியுள்ளதாகவே கூறப்படுகிறது.
Image: EAST2WESTNEWS
அந்த கோரம் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து யாராலும் விளக்க முடியவில்லை. நடாலியா உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லாமல் போனது என குறிப்பிட்டுள்ளனர்.
2017ல் நடந்த இச்சம்பவத்தில் விசாரணையை முடித்துள்ள அதிகாரிகள், நடாலியா மயக்கமடைந்து கேரமல் தொட்டிக்குள் விழுந்திருக்கலாம் என்றும், அல்லது சுத்தம் செய்யும் போது அவர் தவறி விழுந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |