இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்த பெண்! குழந்தையை பெற்றெடுத்தார்
ஹங்கேரிய பெண் ஒருவர் இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்த நிலையில், பல ஆண்டுகள் நீடித்த துன்பங்களுக்கு இறுதியில், தாயாகும் ஆசையை அவர் நிறைவேற்றியுள்ளார்.
விசித்திர குறைபாட்டால் பாதிப்பு
ஹங்கேரிய பெண்ணான அதெல் வர்கா Herlyn-Werner-Wunderlich என்ற விசித்திர குறைபாட்டால் பாதிக்கப்பட, அவருக்கு கருவுறும் தன்மையும் இழக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.
Credit: Caters
அவருக்கு 14 வயதிருக்கும் போதே மாதவிடாய் தருணத்தில் கடுமையான வலியாலும் அதிக உதிரப் போக்காலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து 10 ஆண்டுகள் பல்வேறு கட்ட சிகிச்சைகள், பல மருத்துவர்களை நாடியும் தமது நிலைக்கு என்ன காரணம் என்பதை அவர்களால் உறுதி செய்யவே முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார் அதெல் வர்கா.
ஆனால் அவருக்கு 28 வயதான பின்னர் தான், தாம் பட்ட அவதிகளுக்கு என்ன காரணம் என்பதை அவர் அறிந்து கொண்டுள்ளார். அத்துடன், வர்காவிற்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இளமைப் பருவத்திலிருந்தே தமது உடம்பில் ஏதோ சரியில்லை என்று எப்போதும் சந்தேகப்பட்டதாக வர்கா தெரிவித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக மருத்துவர்கள் தமக்கு தவறான சிகிச்சை அளித்து வந்ததாகவும் வர்கா குறிப்பிட்டுள்ளார்.
Credit: Caters
இரண்டு பிறப்புறுப்புகள்
அவரது 20 வயதில் தான், தமக்கு இரண்டு பிறப்புறுப்புகள் இருப்பதை உறுதி செய்ததாக அவர் கூறுகிறார். இதனாலையே, மாதவிடாய் தருணங்களில் கடுமையான வலியை அனுபவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து 2018ல் உரிய அறுவை சிகிச்சை முன்னெடுத்ததாக கூறும் அவர், அதன் பின்னர் தமது மாதவிடாய் வலி தாங்கக்கூடியதாக இருந்தது எனவும், பல ஆண்டுகளாக பிறப்புறுப்பில் பாக்டீரியா நோய்த்தொற்றிலிருந்தும் விடுதல் கிடைத்தது என்றார்.
Credit: Caters
இந்த நிலையில், 2020 ஆகஸ்டு மாதம், தமது தற்போதைய கணவரை சந்தித்ததாகவும், அவரிடம் தமது நிலை குறித்து விளக்கமாக கூறியதாகவும், ஆனால் அவர் தம்மை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு பின்னர், கடந்த ஜூலை மாதம் அதெல் வர்கா ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |