44 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது ஆப்பிரிக்க பெண்!
உகாண்டா நாட்டை சேர்ந்த மரியம் நபடான்சி என்ற 40 வயது பெண் 44 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இளம் வயதில் திருமணம்
ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டை சேர்ந்த மரியம் நபடான்சி (Mariam Nabatanzi) என்ற பெண்ணுக்கு 12 வயதிலேயே திருமணமாகியுள்ளது.
தனது 13 வயதில் கர்ப்பமான நபடான்சி முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அதன் பின் நபடான்சிக்கு தொடர்ந்து குழந்தைகள் பிறந்துள்ளன. அவருக்கு தற்போது 40 வயது ஆகிறது.
@facebook
இதுவரை 4 முறை இரட்டை குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் என்பது 5 முறை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் 5 முறை பிறந்துள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரே ஒரு பிரசவத்தில் மட்டும் தான் அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
காரணம் இது தான்
நபடான்சி மருத்துவர்களிடம் பரிசோதனை செய்த போது, அந்த பெண்ணுக்கு அசாதாரணமாக பெரிய கருப்பை இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்த நிலைக்கு ஹைப்பர் ஓவுலேஷன்(hyper ovulation) என்று பெயராகும்.
@facebook
இதுபோன்ற நிலையைக் கொண்டிருப்பவர்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் அது மோசமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால், ஒருபோதும் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,
"அவருக்கு இருப்பது ஹைப்பர்-ஓவுலேட் என்ற நிலை. பொதுவாக ஒரு சுழற்சியில் ஒரு முட்டை மட்டுமே வளரும். ஆனால், இதில் ஒரு சுழற்சியில் பல முட்டைகள் வளரும். இது கருவுறும் வாய்ப்புகளைக் கணிசமாக அதிகரிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
@gettyimages
அவர் மொத்தம் 44 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அதில் 6 குழந்தைகள் உயிரிழந்து விட்டது. தற்போது 20 சிறுவர்களும், 18 சிறுமிகள் மட்டுமே இருக்கிறார்கள்.
நபடான்சியின் கணவர் அவரது சொத்துக்களை எல்லாம் எடுத்துக் கொண்டு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நபடான்சி தனது குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டு வருகிறார்.