விமானத்தில் இரண்டு பருமனான பயணிகளுக்கு இடையில் அமர்ந்து நசுங்கிய பெண்! தரப்பட்ட இழப்பீடு
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்.
இரண்டு பருமனான நபர்களுக்கு இடையில் அமர்ந்ததால் நசுங்கி சிரமத்துக்கு ஆளானதாக புகார்.
விமானத்தில் இரண்டு பருமனான நபர்களுக்கு இடையில் அமர்ந்ததால் சிரமத்துக்கு ஆளானதாக கூறிய பெண்ணுக்கு இழப்பீடு கிடைத்துள்ளது.
அவுஸ்திரேலிய - அமெரிக்கா பெண்ணான மருத்துவர் சிட்னி வாட்சன் 3 மணி நேர பயணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸில் பயணித்துள்ளார். அப்போது விமானத்தில் இரண்டு பருமனான நபர்களுக்கு இடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து அவதிப்பட்டதாக புகைப்படத்தை சமூகவலைதளத்தில் சிட்னி பதிவிட்டார்.
இது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது, இந்த நிலையில் விமான நிறுவனம் சார்பில் தனக்கு $150 இழப்பீடு வழங்கப்பட்டதாக சிட்னி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு வந்த இமெயிலில், விமானத்தில் உங்களின் இட நெருக்கடி பிரச்சனைக்கு வருந்துகிறோம். நீங்கள் திருப்தி அடையும் வகையில் நிலைமை சரி செய்யப்படாததால் உங்கள் ஏமாற்றத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
lol @SydneyLWatson is famuz pic.twitter.com/uNwNGNAAGL
— Tim Pool (@Timcast) October 19, 2022
எங்கள் விமானப் பணிப்பெண்கள் இருக்கை அமைப்பில் மாற்றங்களைச் செய்ய முடியவில்லை என்று தெரிகிறது. இதற்கு இழப்பீடாக உங்களுக்கு $150 தரப்படும் மற்றும் அதற்கான இமெயில் தனியாக வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடை நான் எடுத்து கொள்ள மாட்டேன் எனவும் ஜிம்மில் சேர நினைக்கும் யாருக்காவது கொடுப்பேன் எனவும் சிட்னி தெரிவித்துள்ளார். இதனிடையில் எல்லா வகையான உடல்வாகு கொண்ட நபர்களும் தான் விமானத்தில் வருவார்கள் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Here is a sample of the nice emails journalists can expect when they contact me for comment (which I'd prefer they do, rather than making shit up) pic.twitter.com/uwWjBen3S7
— Dr. Sydney Watson (@SydneyLWatson) October 18, 2022