ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பாகிஸ்தான் பெண்
பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
ஜீனத் வாஹித் (Zeenat Waheed) என்ற 27 வயது பெண் 4 ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளிட்ட 6 குழந்தைகளை பெற்றெடுத்தார்.
O7K1BQW
ஏப்ரல் 19 அன்று, ஜீனத் வாஹித், ஒரு மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இந்த ஆச்சரியமான சம்பவம் ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனையில் நடந்துள்ளது.
ராவல்பிண்டியில் உள்ள ஹசிரா காலனியில் வசிக்கும் ஜீனத், ஏப்ரல் 18ஆம் திகதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ராவல்பிண்டி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இப்போது, தாயும் ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், குழந்தைகள் அனைவரும் 2 பவுண்டுகளுக்கும் குறைவான எடையுடன் இருப்பதாகவும் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை இன்குபேட்டரில் வைக்கப்பட்டனர். ஆனால், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீனத்தின் முதல் பிரசவம் இது என்றும், மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிறந்த வசதிகளை செய்து கொடுத்ததாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இது இயற்கையான பிரசவம் இல்லை. பிரசவத்தின் போது சிக்கல்கள் இருந்ததால், மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் சிசேரியன் மூலம் குழந்தைகளை வெளியே எடுத்தனர்.
பிரசவத்திற்குப் பிறகு தாய் ஜீனத்துக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஆனால் அவர் பின்னர் குணமடைந்தார்.
ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் மருத்துவமனையில் இந்த அபூர்வ நிகழ்வு நடந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆறு குழந்தைகளை ஒன்றாக வரவேற்பதில் ஜீனத் மற்றும் அவரது கணவர் முகமது வாஹித்தின் குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Zeenat Waheed, sextuplets, 6 babies, Pakistani Woman Gives Birth To 6 Babies In An Hour