அண்டைவீட்டு நபருக்கு பெண் அளித்த பரிசுப்பெட்டி... உள்ளே இருந்த மனித தலை: நடுங்க வைத்த சம்பவம்
ஸ்பெயின் நாட்டில் பெண் ஒருவர் தமது அண்டைவீட்டு நபருக்கு பாலியல் பொம்மைகள் என அளித்த பரிசுப்பெட்டியில் மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை கொலை செய்த வழக்கு
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 64 வயது கார்மென் மெரினோ என்ற பெண்மணிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கார்மென் மெரினோ, தமது கணவரான ஜீசஸ் மரியா பராண்டா என்பவரை கொலை செய்த வழக்கிலேயே அவர் தண்டனை பெற்றுள்ளார்.
Image: SOLARPIX.COM
மரியா பராண்டா சுமார் 6 மாதங்களாக மாயமான நிலையில், ஒருநாள் மெரினோ தமது அண்டைவீட்டு நபர் மாரி என்பவரிடம், பாலியல் பொம்மைகள் என கூறி பெட்டி ஒன்றை பாதுகாக்க அளித்துள்ளார்.
ஆனால் குறித்த பெட்டியில் இருந்து கெட்ட வாடை வீசத்தொடங்கிய நிலையில், அவர் அதை திறந்து பார்க்க, அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். அந்த பெட்டிக்குள் பாலியல் பொம்மைகளுக்கு பதிலாக, மாயமானதாக கூறப்படும் மெரினோவின் கணவரின் வெட்டப்பட்ட அழுகிய தலை என்பது தெரியவந்தது.
15 ஆண்டுகள் சிறை தண்டனை
இதனையடுத்து உடனடியாக மாரி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நடந்த சம்பவத்தையும் பொலிசாரிடம் விளக்கியுள்ளார். 2019 பிப்ரவரி மாதம் நடந்த இந்த கொலை தொடர்பில் கைதான மெரினோவுக்கு தற்போது 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணவரை கொலை செய்துள்ள்ள மெரினோ, உடல்பாகங்களை வெட்டி துண்டாக்கி நகரின் பல பகுதிகளில் அப்புறப்படுத்தியுள்ளார். ஆனால் தலையை மட்டும், தமது அண்டைவிட்டு நண்பரிடம் ஒப்படைத்து, பொலிஸ் விசாரணையை திசைதிருப்ப திட்டமிட்டுள்ளார்.
Image: SOLARPIX.COM
சொத்துக்களுக்காகவே மெரினோ தமது கணவனை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கணவன் இறந்து 10 ஆண்டுகளுக்கு பின்னரே சொத்துக்களை அனுபவிக்க முடியும் என பதிவு செய்யப்பட்டிருந்ததால் மெரினோ முந்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், பாலியல் பொம்மைகள் என அளிக்கப்பட்ட பெட்டியில், மெரினோ தமது கணவரின் தலையை மொத்தமாக வேகவைத்து உருத்தெரியாதவகையில் பத்திரப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, இந்த கொலை விவகாரம் அம்பலமான நிலையில், தமது காதலரும் மாயமானதாக பொலிசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.