உக்ரேனிய ட்ரோன் தாக்குதலால் உயிருக்கு போராடும் ரஷ்யப் பெண்: மற்றொரு பெண் மரணம்
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் பெண்ணொருவர் கொல்லப்பட்டார்.
பெல்கோரோட் பிராந்தியத்தில் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை அன்று உக்ரைனை நோக்கி ரஷ்யா 273 ட்ரோன்களை ஏவியது.
இந்த தாக்குதல் மத்திய கீவ் மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், டோனெட்ஸ்க் பகுதிகளை குறிவைத்ததால் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், தென்மேற்கு பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைனின் ட்ரோன் தாக்கியுள்ளது.
உயிர்பிழைத்த பெண்
இதில் ஷெபெக்கினோ நகரில் காரில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்தார். உயிர்பிழைத்த மற்றொரு பெண், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 40,000 பேர் வசிக்கும் ஷெபெக்கினோவில், அதிகாலை நடந்த உக்ரைனின் இந்த தாக்குதலில், மேலும் ஒரு பேருந்து சாரதி காயமடைந்ததாக ஆளுநர் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |