31 வயதில் உயிரை மாய்த்துக் கொண்ட பேராசிரியை..கேரளாவில் சோக சம்பவம்
இந்திய மாநிலம் கேரளாவில் பேராசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஓய்வெடுக்க தனது அறைக்கு
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெலிஸ் நசீர் (31). இவர் வயநாடு அருகேயுள்ள மேப்பாடியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஓய்வெடுக்க தனது அறைக்கு சென்ற பெலிஸ் நசீர், மாலை வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் தட்டியும் திறக்காததால், சன்னல் வழியாக பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெலிஸ் நசீர் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்த பொலிசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆலோசனை
முதற்கட்ட விசாரணையில், பெலிஸ் நசீர் உயிரை மாய்த்துக் கொள்வதற்கான எந்த அறிகுறியையும் சக ஊழியர்களிடம் காட்டவில்லை.
திருமணமாகி விவாகரத்தான பெலிஸ், இறப்புக்கு முன்பு அவரது குழந்தையை தன் தாயிடம் அனுப்பி வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
மருத்துவர்களுக்கு இடையே ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கவுன்சிலில் பெலிஸ் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |