திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள 3,000 மைல்கள் பயணித்த பெண்: பின்னர் நடந்த சுவாரசிய சம்பவம்
இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தமது நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, 3,000 மைல்கள் பயணித்து ஸ்கொட்லாந்து சென்ற நிலையில், ஏற்பட்ட சுவாரசிய திருப்பம் குறித்து அவரே பதிவு செய்துள்ளார்.
3,000 மைல்கள் பயணித்து
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் குடியிருக்கும் ஆர்த்தி மாலா என்ற இந்திய வம்சாவளி பெண் 3,000 மைல்கள் பயணித்து ஸ்கொட்லாந்து சென்றுள்ளார். கிளாஸ்கோவில் வாடகை டாக்ஸியை அமர்த்திக் கொண்டு திருமணம் நடக்கவிருக்கும் அரங்கிற்கும் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சென்ற போது தான் புரிந்து கொண்டார், அது தமது நண்பரின் திருமண அரங்கு அல்ல என்பதை. தனது நண்பர் கவுரவ் என்பவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஆர்த்தி மாலா சனிக்கிழமை கிளாஸ்கோவிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அந்த அரங்கத்திற்கு சென்ற பின்னர் தான் அந்த விழாவானது கெய்த்லின் மற்றும் ஸ்டீபன் என்பவர்களின் திருமணம் என்று அவர் தெரிந்து கொண்டார்.
சில சடங்குகளை தவறவிட்டதாக
இதனிடையே, விசாரித்ததில் அவரது நண்பரின் திருமணமானது அங்கிருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ள இன்னொரு அரங்கத்தில் நடைபெறுவதாக அறிந்துகொண்டார்.
உடனடியாக அங்கிருந்து இன்னொரு டாக்ஸியில் அந்த அரங்கம் சென்றுள்ளார் ஆர்த்தி மாலா. ஆனால் தாமதமானதால் குறிப்பிட்ட சில சடங்குகளை அவர் தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |