ஆணுடன் தொலைபேசியில் பேசியதற்காக ஆப்கானிஸ்தானில் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட கொடூர தண்டனை: ஒரு அதிர்ச்சி வீடியோ
ஆண் ஒருவருடன் தொலைபேசியில் பேசியதற்காக, பெண் ஒருவர் சாட்டையால் அடிக்கப்படும் பயங்கர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்ட ஆப்கன் மக்கள், நீதியை நிறைவேற்ற தலிபான்களை நாடிவருகிறார்கள்.
ஏற்கனவே அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், அவர்கள் வெளியேறினால் ஆப்கானிஸ்தானின் நிலைமை எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சான்றாகவே இந்த வீடியோ அமைந்துள்ளது. Haftgola என்ற கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
தொலைபேசியில் ஒரு ஆணுடன் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணை ஆண்கள் பலர் சூழ்ந்து ஓரிடத்திற்கு அழைத்து வருகிறார்கள்.
தலிபான் தலைவர்கள் மூவர் அந்த பெண்ணுக்கு என்ன தண்டனை என்று
தீர்ப்பளிக்கிறார்கள்.
அதன்படி, அந்த பெண்ணுக்கு 40 சவுக்கடிகள் கொடுப்பது என தீர்ப்பளிக்கப்படுகிறது.
வெளியாகியுள்ள வீடியோவில், ஏராளமான மக்கள் கூடியிருக்க, அந்த பெண்ணை ஒருவர்
சவுக்கால் அடிக்கிறார்.
அவர் கை ஓய்ந்ததும் சாட்டையை அவர் மற்றொருவரிடம் கொடுக்க, தொடர்ந்து அவர் அந்த பெண்ணை அடிக்கிறார்.
நெருப்பில் விழுந்த புழு போல வலியால் துடித்தபடி, நான் செய்தது தவறுதான், உணர்ந்துவிட்டேன், மனம் திரும்புகிறேன் என அந்த பெண் கதறக் கதற, விடாமல் அவரை அடிக்கிறார் அந்த நபர்.
இதை பலர் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதுடன், சிலர் தங்கள் மொபைல்களில் அதை வீடியோவும் எடுக்கிறார்கள். மறுபக்கம், அந்த பெண்ணுடன் தொலைபேசியில் பேசிய ஆணும் தண்டிக்கப்பட்டுள்ளார், அவருக்கோ, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்கப்படைகளை செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி திரும்பப் பெற்றுக்கொள்ள இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கப் படைகள் ஆப்கனில் இருக்கும்போதே இப்படிப்பட்ட கொடூரங்கள் நிகழும் என்றால், அவர்கள் அமெரிக்கா திரும்பியதும் தங்கள் நிலைமை என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் ஆப்கன் மக்கள்!
வீடியோவை காண - https://www.dailymail.co.uk/news/article-9515693/Woman-pleads-mercy-lashed-40-times-Taliban.html