சாலையில் நின்ற வண்டியிலிருந்து பெட்ரோலை திருடி பைக்கிற்கு தீ வைத்த பெண்: வீடியோ
டெல்லியில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை வெளியேடுத்து, அந்த வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிசிடிவி காட்சியில் சிக்கிய பெண்
டெல்லியின் தென்கிழக்கு மாவட்டமான ஜெய்த்பூரில், பெண் ஒருவர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனம் ஒன்றில் இருந்து பெட்ரோலை வெளியே எடுத்து, அதே வாகனத்தை தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே பெண் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு வாகனத்தை தீயிட்டு கொளுத்த முற்பட்ட போது அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
#WATCH | A woman was found taking out petrol from a bike and setting it on fire in Jaitpur police station area of Delhi's South East District last night. She was later trying to put another bike on fire during which locals caught her and handed her over to police: Delhi Police… pic.twitter.com/EXqSZ1f8nQ
— ANI (@ANI) May 12, 2023
இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், அந்த பெண் ஜெய்த்பூரில் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது தனது பார்வையை செலுத்தி நிற்கிறார்.
சுற்றியுள்ள பகுதிகளை நன்கு ஆராய்ந்த பிறகு, அங்கு நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை வெளியே எடுத்து, தீப்பெட்டி கொண்டு வாகனத்திற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து விலகி செல்கிறார்.
சம்பந்தப்பட்ட பெண் மற்றொரு வாகனத்திற்கு தீ வைக்க முயற்சிக்கும் போது, உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் அந்த பெண் எதற்காக இத்தகைய சம்பத்தில் ஈடுபட்டார் என்பது குறித்த தகவல் நமக்கு கிடைக்கவில்லை.
பொலிஸார் கண்முன்னே பைக்கை தீயிட்டு கொளுத்த நபர்
கடந்த வருடம் தெற்கு டெல்லியின் சாகட் பகுதியில் முகேஷ்(33) என்ற உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர், தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனத்தை பார்க் செய்ததற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டார்.
இதையடுத்து பொலிஸாருடன் எழுந்த வாக்குவாதத்திற்கு பிறகு, முகேஷ் தன்னுடைய பைக்கை சாலையிலேயே தீயிட்டு கொளுத்தினார். பின்னர் அவர் பொலிஸாரால் கைதும் செய்யப்பட்டார்.