113 வயதிலும் ஜனநாயக கடமை ஆற்றிய மூதாட்டி
மஹாராஷ்டிரா மாநில தேர்தலில் தனது 113 வயதிலும் மூதாட்டி ஒருவர் ஜனநாயக கடமை ஆற்றியுள்ளார்.
113 வயது மூதாட்டி
இந்திய மாநிலமான மஹாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 20) தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகளும் 11 மணி வரை 18.14 சதவீத வாக்குகளும் பதிவானது. இதையடுத்து, மதியம் 1 மணி நேர நிலவரப்படி 32.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்றதில் இருந்து மந்தமாக இருந்து வந்தது. இந்நிலையில், 113 வயதான கஞ்சன்பென் பாட்ஷா என்ற பெண்மணி நேரில் வந்து வாக்களித்தார்.
இந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கஞ்சன்பென் பாட்ஷா, வீல் சேரில் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார்.
இம்மாநிலத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் இவர் வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |