பெண்கள், பிள்ளைகள் உட்பட மொத்தமாக ஜலசமாதியான புலம்பெயர் மக்கள்: வெளியான அதிரவைக்கும் தகவல்
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண்கள், பிள்ளைகள் உட்பட 61 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி பலியான அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
சுமார் 86 பேர்களுடன்
தொடர்புடைய தகவலை புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு உறுதி செய்துள்ளது. இதில் உயிர் தப்பியவர்கள் தெரிவிக்கையில், தொடர்புடைய படகானது சுமார் 86 பேர்களுடன் சுவாரா நகரில் இருந்து புறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
@ap
கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட பேரலையால் படகு விபத்தில் சிக்கியதாகவும், இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 61 புலம்பெயர்ந்தோர் இறந்ததாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பாவில் நுழைய திட்டமிடும் மக்கள் பலர் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க லிபியாவை தெரிவு செய்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்ற 2,200க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
லிபிய தடுப்பு மையத்திற்கு மாற்றம்
தற்போது லிபியா கடற்பகுதியில் மரணமடைந்த பலரும் நைஜீரியா, காம்பியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என்றே தெரியவந்துள்ளது. இதனிடையே, உயிர் தப்பிய 25 பேர்கள் மீட்கப்பட்டு லிபிய தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
@reuters
கடந்த ஜூன் மாதம், தெற்கு கிரீஸில் புலம்பெயர் மக்களுடன் புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 78 பேர் மரணமடைந்தனர் மேலும் 100 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், துனிசியா மற்றும் லிபியாவில் இருந்து இந்த ஆண்டு 153,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளதாக ஐ.நாவின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |