ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றதாக கூறிய பெண்! அவர் கர்ப்பமே ஆகவில்லை... எல்லாமே பொய்... வெளிவந்த உண்மை
தென்னாப்பிரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெண்ணொருவர் பெற்றெடுத்ததாக கூறப்பட்ட நிலையில் அவற்றில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.
தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் 10 நாட்களுக்கு முன்னர் 37 வயதான Gosiame Sithole ஒரே பிரசவத்தில் 10 பிள்ளைகளை பெற்றெடுத்ததாக கூறப்பட்டது.
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்ததே உலக சாதனையாக இருந்த நிலையில் தற்போது Gosiame Sithole 10 பிள்ளைகளை பெற்றெடுத்தது புதிய சாதனையாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் Gosiame Sitholeன் கணவர் Tebogo Tsotetsi மற்றும் அவர் குடும்பத்தார் இது பொய்யாக இருக்கலாம் என சமீபத்தில் தெரிவித்தனர்.
இப்படி இந்த விடயத்தில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் Gauteng மாகாண அரசு Gosiame தொடர்பில் அதிகாரபூர்வ உண்மையை வெளியிட்டுள்ளது.
அதன்படி Gosiame 10 குழந்தைகளை அல்ல ஒரு குழந்தையை கூட பிரசவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் கர்ப்பமாகவே இல்லை என தெரியவந்துள்ளது.
இந்த விடயங்கள் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Gosiameக்கு மருத்துவ, உளவியல் மற்றும் சமூக ஆதரவைத் தொடர்ந்து வழங்கவும், அவருக்குத் தேவையான எந்தவொரு ஆலோசனையையும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.