தன்னை யாரோ கடத்தி சென்று வன்கொடுமை செய்ததாக கூறிய அழகிய இளம்பெண்! விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை
அமெரிக்காவில் தான் கடத்தி செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டதாக பொலிசில் பொய் கூறிய இளம்பெண்ணுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிச்சிகனை சேர்ந்தவர் அபிகைல் அர்சனால்ட். இளம்பெண்ணான இவர் பொலிசில் ஒரு புகாரை அளித்திருந்தார்.
அதில் தன்னை சிலர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் என கூறி பரபரப்பை கிளப்பினார்.
இது தொடர்பான விசாரணையில் அவர் சொன்னது அனைத்தும் பொய் என தெரியவந்தது. இதையடுத்து அபிகைல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்த நிலையில் இவ்வளவு பெரிய பொய் குற்றச்சாட்டை முன் வைத்த அபிகைக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 365 நாட்கள் probationல் இருக்கவும், 200 மணி நேரம் சமூக சேவை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் $11,822.72 இழப்பீடாக வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கறிஞர் ஸ்டுவார்ட் பெண்டன் கூறுகையில், வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு அபிகைல் கெட்ட பெயரை ஏற்படுத்தியிருக்கிறாள்.
ஏனென்றால் யாராவது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார் கொடுத்தால் அது உண்மை தானா என கேள்வி எழும்.
இவரை போன்றவர்களால் தான் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் மீது தவறான பிம்பம் ஏற்படுகிறது என கூறியுள்ளார்.