உணவில் விஷம் கலந்து கணவன் வீட்டாரைக் கொல்ல முயன்ற பெண் கைது
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், கணவனையும் அவரது வீட்டாரையும் கொல்ல உணவில் விஷம் கலந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவிலிருந்து வீசிய நாற்றம்
திங்கட்கிழமையன்று, உத்தரப்பிரதேசத்திலுள்ள Malkiya என்னும் கிராமத்தில் வாழ்ந்துவரும் பிரிஜேஷ் குமாரின் மனைவியான மாலதி தேவி மாவு பிசைந்து கொண்டிருந்திருக்கிறார்.
மாவிலிருந்து ஏதோ நாற்றம் வீசுவதைக் கவனித்த பிரிஜேஷ், அது என்ன நாற்றம் என கேட்க, உன்னையும் உன் குடும்பத்தினரையும் கொல்ல மாவில் விஷம் கலந்திருக்கிறேன் என்றே கூறியுள்ளார் மாலதி.
பிரிஜேஷ் உடனடியாக பொலிசாரை அழைக்க, அந்த மாவைக் கைப்பற்றிய பொலிசார் அதை ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளார்கள்.
மாலதியிடம் நடத்திய விசாரணையில், தன் தந்தையான கல்லு பிரசாத் மற்றும் சகோதரரான பஜ்ரங்கி ஆகியோருடைய திட்டத்தின்படியே தான் மாவில் விஷம் கலந்ததாகக் கூறியுள்ளார்.
மாலதி, பிரசாத் மற்றும் பஜ்ரங்கி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |